எய்ட்ஸ் நோய்: இரண்டாவது இடத்தில் இந்தியா
டெல்லி:
உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கைப்படி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வரிசையில்இந்தியா இரண்டாது இடத்தில் உள்ளது எனத் தெரிய வந்துள்ளது.
அதாவது இந்தியாவில் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் 3.7 மில்லியன் பேர் உள்ளனர்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கை:
உலகிலேயே தென் ஆப்பிரிக்காவில் அதிகம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 3.8 சதவீதம்பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் தொகை அதிகம் இருப்பதாலும், போதிய படிப்பறிவு இல்லாத காரணத்தாலும் எய்ட்ஸ் நோய் இந்தியாவில்மிக வேகமாகப் பரவி வருகிறது.
குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் அதிகம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள்தெரிவிக்கின்றன. மணிப்பூர் மாநிலத்திலும் எய்ட்ஸ் நோயால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மனைவிக்குத் தெரியாமல் விபச்சாரம் செய்பவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் கணவன் மூலம்சதாரணமாக மனைவிக்கும் எய்ட்ஸ் நோய் பரவி விடுகிறது.
தெற்காசியாவில் எய்ட்ஸ்:
தெற்காசியாவில் மொத்தம் 7 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 லட்சத்து 50, 000பேர் ஆண்கள்.
கிழக்கு ஆசியா பகுதியில் இந்த வருடத்திற்குள் 1, 30, 000 க்கும் மேற்பட்டோர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படும்அபாயம் உள்ளது. தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் மொத்தம் 6.4 மில்லியன் பேர் எய்ட்ஸ் நோயால்பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் எய்ட்ஸ்:
சீனாவில் 1985 ம் வருடம் 5800 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். 1999 ம் வருடம் எய்ட்ஸ்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8, 36, 000 ஆக உயர்ந்துள்ளது. மியான்மர் மற்றும் கம்போடியாஆகிய நாடுகளிலும் எய்ட்ஸ் நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது.
போதைப் பொருட்கள் உபயோகப்படுத்துதல், குறைந்த கல்வி, அதிக மக்கள் தொகை மற்றும் பல காரணங்களால்எய்ட்ஸ் நோய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது என்று உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மும்பையில் எய்ட்ஸ் நோய்:
இந்தியாவில் மகராஷ்டிர மாநிலத்தில் தான் அதிக அளவு எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கின்றனர் என்று எய்டஸ்நோய் கட்டுப்பாட்டு வாரிய இயக்குநர் டாக்டர் அசோக் சர்மா தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை உலக எய்ட்ஸ் நோய் கொண்டாடப் படுவதையொட்டி, அவர் நிருபர்களிடம் கூறுகையில்,மத்தியப்பிரதேசத்தின் மேற்குப் பகுதிகளில் அதிக அளவு மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தூரிலிருந்து 190 பேரும், உஜ்ஜைனியில் 89 பேரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு மேற்கத்தியக் கலாச்சாரம் பரவி வருவதும் எய்ட்ஸ் நோய் பரவி வருவதற்கு ஒரு காரணம். குஜராத்திலும்எய்ட்ஸ் நோய் அதிக அளவில் பரவி வருகிறது என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications