தேசவிரோத சக்திகளின் புரோக்கர் நெடுமாறன்
சென்னை:
விடு படமுடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டு தேச விரோத சக்திகளின் புரோக்கராக வடிவெடுத்து நிற்கும் நெடுமாறன் நடத்திய மனித நேயத் தூதில்மறைக்க ஏதுவும் இல்லை என்பது பித்தலாட்டம் என்று அ.தி.மு.க அவைத் தலைவர் கா.காளிமுத்து வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் இருந்து, மனித நேயத் தூதர் என்று மார் தட்டிக் கொள்ளும் யோக்கியதை நெடுமாறனுக்கு உண்டா? நடிகர் ராஜ்குமார் கடத்தல்நாடகத்தில் பல மர்மக் கதைகளை விட மயிர் கூச்செரியும் சம்பவங்கள் நிகழ்ந்ததை மூடி மறைக்கும் மோசடிகளுக்குத் துணை போன நெடுமாறன் யாரைஎச்சரிக்கிறார் என்பதை எண்ணிப் பார்த்தாரா?
விடுதலைப் புலிகளிடமும், தீவிரவாதிகளிடமும் பணத்தை வாங்கிப் பங்கு போடுவது நெடுமாறன் என்பது நாட்டிற்குத் தெரியாதா? நடிகர் ராஜ்குமார்கடத்தலில் பெறப்பட்ட பணத்தில் இவர் பெற்ற பங்கு என்ன? என்பதை வெளியிடும் தைரியம் நெடுமாறனுக்கு உண்டா?
திருடனை ஒடுக்குவதும், தண்டிப்பதும் தவறு என்று விமர்சிக்கும் நெடுமாறனுக்குள் புதைந்து கிடப்பவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியாதா?வீரப்பனின் கூட்டாளிகள் எல்லாம் அப்பாவிகள் என்று கயிறு திரிக்கும் நெடுமாறன் இந்தியாவைக் கெடுக்கும் பிரிவினைவாதிகளின் புரோக்கர் என்பதுநாடறிந்த ரகசியம் அல்லவா?
காட்டை சூறையாடிய வீரப்பனை மனித நேயம் மிகுந்தவன் என்றும், வெகுளி என்றும் நெடுமாறன் புகழ்வது எதற்காக? 130 பேரைக் கொன்றவனைஉத்தமர் என்று புகழும் அளவுக்கு நெடுமாறன் புத்தி கெட்டுப் போனதற்கு காரணம் என்ன?
தேசிய வாதியாக இருந்து தீவிரவாதியாகி விட்ட நெடுமாறனைத் தவிர வேறு யாரையும் தூதராக ஏற்க வீரப்பன் சம்மதிக்க வில்லையே ஏன்?விடுதலைப் புலிகளின் பணத்தில் அரசியல் நடத்தி இந்தியாவில் பிரிவினை சக்திகளை ஊக்குவிக்கும் நெடுமாறனை மட்டும் வீரப்பன் விரும்பி வரவேற்றதுஎப்படி?
அரசு தூதரைக் கூட அழைக்காமல் சென்ற நெடுமாறன் ஒரு காலத்தில் சிறந்த புத்தமாக இருந்தது உண்மை தான். இப்பொழுது மர்மமும், திகிலும்நிறைந்த மந்திரவாதியாக இருப்பது தான் உண்மையிலும் உண்மை. 40 லட்சம் தமிழர்களின் உயிரோடு விளையாடியது வீரப்பன் அல்லவா? அவனுக்குப் பரிந்துபேசி பல்லக்கு தூக்குவது கருணாநிதியும், நெடுமாறனும் தானே?
108 நாட்கள் கர்நாடகத் தமிழர்களை நெருப்பில் போட்டவன் வீரப்பன் தானே? காலம் காலமாக இருந்து வரும் கன்னடர்- தமிழர் நல்லுறவில் நடிகர்ராஜ்குமார் மீட்கப்பட்ட பிறகு புதிய அத்தியாயம் முளைத்திருப்பதாக நெடுமாறன் கூறுவது விஷமத்தனம் அல்லவா? விடுதலைப் புலிகளுக்கும்தீவிரவாதிகளுக்கும் விளம்பரம் தேடும் வியாபாரி ஆகிவிட்ட நெடுமாறன் நிலையை எண்ணிப் பரிதாபப்படுகின்றேன்.
கடந்த நாலரை ஆண்டுகளாக வீரப்பனை வளர்த்தது கருணாநிதி என்று தான் மக்கள் நினைத்தார்கள். இப்பொழுது நெடுமாறனும் வீரப்பனின் நெருங்கிய சகாஎன்பது உறுதியாகிவிட்டது. வீரப்பனை கேடயமாகப் பயன்படுத்தும் தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட ஆயுதம் எவ்வளவு? கொடுக்கப்பட்ட பணம்எவ்வளவு?
பணத்தை வீரப்பன் தமிழகக் காடுகளில் புதைத்தானா? வவுனியாக் காடுகளுக்கு அளித்தானா? கருணாநிதி யும், நெடுமாறனும் விசாரணையை எதிர்கொள்ளவேண்டும் என்று எங்கள் கழக பொதுச் செயலாளர் இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி எழுப்பிய வினாக்களுக்கு விடையளிக்க முடியாமல் விழிபிதுங்குவது மக்களுக்கு தெரியாதா? கொலையில் கொடியவரை வேறறுப்பதும், தண்டிப்பதும் அரசின் கடமை.
வளர்பதும் புகழ்வதும் தீயவர் இயல்பு. தீயவர்களாகி விட்ட கருணாநிதியும் நெடுமாறனும் நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். அந்தக்காலம் விரைவில் வரும். இவ்வாறு காளிமுத்து தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications