மாருதி உதயாக் ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்
டெல்லி:
மாருதி உதயாக் நிறுவனம் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதாக வியாழக்கிழமை அறிவித்தது.
மாருதி உதயாக் தொழிலாளர்கள் சங்கத் தலைவர்கள் மாத்யூ ஆபிரகாம் இதை வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார். 4500 க்கும் மேற்பட்டதொழிலாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஜப்பானின் சுசூகி நிறுவனமும் இந்திய அரசும் இணைந்து மாருதி-சுசூகி கார் நிறுவனத்தை உருவாக்கின. இப்போது அனைத்துத் துறைகளையும்தனியார்மயமாக்கி வரும் மத்திய அரசு மாருதி நிறுவனத்தையும் முழுவதுமாக தனியாரிடம் விற்றுவிடத் திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து அரசிடம் உள்ள 50 சதவீத மாருதி நிறுவன பங்குகளை வாங்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த பங்குகளை தானே வாங்கிவிட சுசூகிநிறுவனம் நினைக்கிறது.
ஏற்கனவே இந்த நிறுவனத்திடம் மாருதியின் 50 சதவீத பங்குகள் உள்ளன. மீதி பங்குகளையும் வாங்குவதன் மூலம் இந்தியாவின் மாருதி கார் நிறுவனம்முழுவதுமாக சுசூகியின் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
சுசூகி நிறுவனத்திலும் ஜெனரல் மோட்டர்ஸ் ஏற்கனவே முதலீடு செய்துள்ளது. சுசூகியின் 20 சதவீத பங்குகள் இப்போது ஜெனரல் மோட்டர்சிடம் தான்உள்ளது. இந்த இரு நிறுவனங்களுமே கிட்டத்தட்ட இணைந்து தான் செயல்பட்டு வருகின்றன.
இதனால், இந்த இரு கார் தயாரிப்பு நிறுவனங்களுமே இணைந்து மாருதியை வாங்க முயற்சிக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், தனது பங்குகளை இந்தியஅரசு எப்படி விற்கப் போகிறது என்பதில் தான் இனி எல்லாமே அடங்கியிருக்கிறது. பங்குகளை மொத்தமாக ஒருவருக்கே விற்க இந்திய அரசு முன்வந்தால் ஜெனரல் மோட்டர்ஸ்-சுசூகி இணைந்து அதை வாங்கிவிடும்.
அப்படி இல்லாமல் தன்னிடம் உள்ள பங்குகளை பலருக்கு இந்திய அரசு விற்றால் அதை சுசூகியோ, ஜெனரல் மோட்டார்ஸோ அல்லது இருவருமேஇணைந்தோ வாங்குவார்களா என்பது சந்தேகமே.
இதற்கிடையே, அடுத்த சில மாதங்களில் மாருதி உதயாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட 82 ஊழியர்கள் மீண்டும்வேலையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மேலும் அனைத்து ஊழியர்களும் மிகவும் நல்ல முறையில் நடத்தப்படுவார்கள் என்று மத்திய அரசுகூறியதையடுத்து மாருதி ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications