தமிழகத்தில் 10 மாதங்களில் 40, 000 விபத்துக்கள்
கோவை:
தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில், 38 ஆயிரத்து 727 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 7 ஆயிரத்து 459 பேர் இறந்துள்ளனர். விபத்துகள்பெரும்பாலானவை டிரைவர்களின் கவனக் குறைவால் நிகழ்ந்துள்ளன.
கோவையில் சாலைப் பாதுகாப்பு வார விழாவைத் துவக்கி வைத்து பேசிய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை இணை ஆணையர் சம்பத் பேசியதாவது:
கடந்த ஆண்டில் தமிழகத்தில் விபத்துக்கள் மூலம், 9 ஆயிரத்து 653 பேர் இறந்தனர். இதில் ஓட்டுநர்களின் கவனக் குறைவே மிகவும் அதிகமாக இருந்துவந்துள்ளது. இந்த ஆண்டு ,
தமிழகத்தில் கடந்த 10 மாத காலத்தில், 38 ஆயிரத்து 727 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 7 ஆயிரத்து 459 பேர் இறந்துள்ளனர்.
ஓட்டுநர்களின் கவனக் குறைவால், 7 ஆயிரத்து 234 பேர் இறந்துள்ளனர். விபத்துக்களை குறைக்க தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
மேலும், மத்திய அரசின் உதவியுடன் டிரைவர்களுக்கென சிறப்பு பயிற்சிகாலத் திட்டம் ஒன்றை நிடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதற்கு மத்திய அரசின்நதியுதவி கோரப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி தென்னிந்திய அளவில் ஏற்படுத்தப்படும். கனரக வாகனங்களில் ஸ்பீடு கவர்னன்ஸ் எனப்படும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தவிரைவில் முடிவெடுக்கப்படும்.
தற்போது தமிழகத்தில் 49 லட்சம் வாகனங்கள் ஓடிக் கொண்டுள்ளன. இந்த வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால், ஏற்படும் சுற்றுச் சூழலைக்கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
காரியமற்ற பெட்ரோல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. டீசலில் சல்பரைக் குறைக்கும் முயற்சியும் மேற் கொண்டு வருகிறோம்.
தற்போதுள்ள சல்பரின் அளவான 0.25 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தவிர, பெட்ரோல் ஆயில் கலந்த பெட்ரோலை பாக்கெட்டுகளில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications