பாக். போர் நிறுத்தத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: அத்வானி
பரோடா:
இந்திய அரசு காஷ்மீரில் ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு போர் நிறுத்தம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் இந்த போர் நிறுத்தத்தை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொண்டு சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்என மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கூறியுள்ளார்.
அத்வானி இது பற்றி கூறியதாவது:
இந்தியா அறிவித்துள்ள போர் நிறுத்தத்தை உலக நாடுகள் பலவும் வரவேற்றுள்ளன. காஷ்மீர் மக்கள் இந்த அறிவிப்பினால் மிகுந்த சந்தோஷத்துடன்இருக்கின்றனர்.
அவர்கள் வெகு நாட்களுக்குப் பிறகு துப்பாக்கிகளின் சத்தங்கள் கேட்காமல் நிம்மதியாக இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் தற்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது இரு நாட்டு வரலாற்றிலும் திருப்பு முனையாகஅமையும் என்பதில் ஐயமில்லை.
பிரதமர் வாஜ்பாயின் லாகூர் பயணத்தை தவறாக பயன்படுத்தி கார்கிலில் ஊடுறுவி இந்தியாவுடன் போர் தொடுத்தது பாகிஸ்தான். இப்போது உள்ளவாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு எல்லை தாண்டிய பயங்கரத்தை நிறுத்திக் கொண்டு அமைதிப் பேச்சு வார்தையை மீண்டும் துவக்க தேவையானஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இந்தியாவும், பாகிஸ்தானும் நட்பு நாடுகளாக இருந்தால் இரு நாடுகளுக்கும் நல்லது. இரு நாடுகளும் ஆயுதங்களுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் பெரும்பணத்தை செலவு செய்து வருகிறது.
காஷ்மீரில் இப்போது அமைதி நிலவி வருகிறது. அடிக்கடிஊடுறுவல் நடக்கும் பகுதிகளில் ஊடுறுவல் தற்போது இல்லாததால் எல்லைப் பகுதியில் வாழும்மக்கள் அமைதியாக இருக்கிறார்கள்.
தீவிர வாதத்தில் ஈடுபடும் நாடுகள் தனிமைப்படுத்தப்படுகின்றன. பாகிஸ்தான் தீவிரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது என்பதை பல நாடுகளும்அறிந்துள்ளன.
பாகிஸ்தானும் தனிமைப்பபடுத்தப்படலாம் என்பதை உண்ர்ந்துள்ளது. இந்தியாவை நேரடி போரிலும் மறைமுக போரிலும் தோற்கடிக்க முடியாது என்பதைபாகிஸ்தான் உணர்ந்துள்ளது என கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications