கணவனைக் கொன்ற மனைவிக்கு வலைவீச்சு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் கள்ளக் காதல் எதிரொலியால் கணவனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மனைவியைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை கணபதி அருகே உள்ள காமராஜ் நகர் அரிசனக் காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (30). இவரது மனைவி விஜயா (26). இருவருக்கும் 8வயதில் ஒரு மகனும் ஓரு மகளும் உள்ளனர்.

இந் நிலையில் விஜயா, அருகில் இருக்கும் மளிகைக் கடைக்கு அடிக்கடி சென்று பொருட்கள் வாங்கி வந்தார். இந்த மளிகைக் கடையை முருகன் (30), காசி(27), ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகளாவர்.

விஜயாவின் அழகில் மயங்கிய இருவரும், விஜயாவுடன் உல்லாசமாக இருந்து வந்தனர். ஒரு முறை இதனை விஜயாவின் கணவன் செல்வராஜ் பார்த்துவிட்டார். எனவே விஜயாவை கண்டித்தார்.

ஆனால் விஜயா, தொடர்ந்தார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. எனவே விஜயா தனது சொந்த ஊரானதிருநெல்வேலிக்குச் சென்று விட்டார்.

மேலும், தனது கள்ளக் காதலுக்கு இடையூறாக உள்ள செல்வராஜை கொலை செய்து விடுமாறு தனது காதலர்களிடம் கூறியுள்ளார். இந்த திட்டத்தின்படிவியாழக்கிழமை செல்வராஜ், சினிமா பார்த்து விட்டு திரும்பி வந்தார். அப்போது அதிகாலை என்பதால், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, செல்வராஜின்கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளனர்.

அதி காலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த செல்வராஜை வீட்டு வாசலில் ரத்தத்துடன் பார்த்த சிலர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+