திமுக - பாமக மோதல் ஆரம்பமாகிறது
மறுபடியும் தமிழக அரசியல் களத்தில் தி.மு.க , பா.ம.க மோத ஆரம்பித்திருக்கிறது.இரு தரப்பிலும் அனல் பறக்கும் அறிக்கைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
பா.ம.கவின் போக்கில் நிறைய மாறுதல்கள் இருக்கின்றன. பல கூட்டங்களில் பா.ம.கதேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறது என்று வெளிப்படையாக டாக்டர்ராமதாஸ் பேசினாலும், வாழப்பாடி, ராமதாஸூக்குமிடையேயான மோதல்களுக்குப்பிறகு ராமதாஸ் தி.மு.கவுடன் கூட்டணி தேவையா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள்.
பெரம்பலூர் மாவட்டம், ஆண்டிமடம் சட்டமன்ற பா.ம.க தொகுதி மாநாட்டில் பேசியடாக்டர் ராமதாஸ், தி.மு.கவையும், கலைஞரையும் கடுமையாக விமர்சித்தார். பா.ம.கஆதரவின்றி தி.மு.க ஆட்சியமைக்க முடியாது. என்று குறிப்பிட்டுப்பேசியவர், தி.மு.கஎன்னை ஓரம் கட்ட நினைக்கிறது. பா.ம.கவுக்கு எதிரான சில தலித்அமைப்புகளுடனும், தலைவர்களுடனும் தி.மு.க சேர்ந்து கொண்டு எங்களை வீழ்த்தநினைக்கிறது என்று ஆவேசமாகப்பேசிமுடித்தார்.
அந்த நிலையிலேயே தி.மு.க தரப்பில் இருந்து பதிலறிக்கைகள் வரும் என்று பலரும்எதிர்பார்த்தார்கள். உடனடியாக, தி.மு.கழகத்தின் சீனியர் அமைச்சர் வீரபாண்டிஆறுமுகம் ராமதாஸூக்கு அறிக்கை விடுத்தார். மற்றவர் காலை நம்பி தி.மு.கநடைபோடவில்லை, கருணாநிதி மீது வீண் பழி சுமத்தி உள்நோக்கத்தோடு விமர்சனம்செய்வது நல்லது என்று அறிக்கை வெளியிட்டார்.
அமைச்சருடைய அறிக்கையில், டாக்டர் ராமதாஸ், திராவிட முன்னேற்றக்கழகத்தையும், கழக அரசையும், கழக தலைவர் கலைஞரையும் கடுமையாக விமர்சனம்செய்து இருப்பது தோழமை கட்சியின் தலைவருக்கு அழகல்ல.
கருணாநிதி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் கட்சித் தலைவர்களையும்,தோழர்களையும் மதிக்கின்ற மாண்பு இருக்கின்ற காரணத்தினால்தான், சமீப காலமாகதொடர்ந்து ராமதாஸ் கழக தலைவரையும், ஆட்சியையும் கடுமையாக பொறுத்துக்கொள்ளமுடியாத வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருவதற்கு கூட எங்களதுதலைவர் இதுவரை மறுப்போ, கண்டனத்தையோ தெரிவிக்கவில்லை.
இது அவரது அரசியல் பெருந்தன்மையை காட்டுவதாகும். அதனாலேயே, இதுகோழைத்தனம் என்று கருதிவிடக் கூடாது.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், எங்கள் ஆதரவுஇல்லாமல் தி.மு.க ஜெயிக்க முடியுமா? என்று பேசியிருக்கிறார் பா.ம.க நிறுவுனர்.தி.மு.க தேர்தலை குறிக்கோளாக கொண்டு தொடங்கப்பட்ட கட்சியும் அல்ல,ஆட்சியில் அதிகாரம் தான் முக்கியம் என்று செயல்படக் கூடியவர்கள் அல்ல நாங்கள்.
ஆனால் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு மக்களுக்கு தொண்டு செய்ய எங்களைபக்குவப்படுத்திக் கொண்டவர்கள் நாங்கள். தி.மு.க மற்றவர்களின் காலை நம்பிநடைபோட எண்ணி தொடங்கப்பட்ட கட்சியும் அல்ல.
அப்படி தேர்தல் களத்தை கண்டவர்களும் அல்ல. ஆனால் ஜனநாயகத்தில் அரசியல்கட்சிகள் இரண்டு அணிகளாகவோ அல்லது ஒரு சில கட்சிகள் தனித்தனியாகவோமக்களை சந்திக்கின்றன.
அதைப் போலத்தான், தேசிய ஜனநாயக கூட்டணியில் தி.மு.க , பா.ஜ.க , பா.ம.கமற்றும் சில கட்சிகள் இருக்கின்றன. ஒரு வேளை தேசிய ஜனநாயக கூட்டணியில்பா.ம.க நீடிக்க விரும்பாமல் தனித்து போட்டியிட விரும்பினால் அது அவர்கள் சொந்தமுடிவு. அதற்காக தி.மு.க மீதும் எங்கள் தலைவர் மீதும் தேவையில்லாமல் பழி சுமத்திபேசுவது அரசியல் நாகரிகம் ஆகாது என்று ராமதாஸின் பேச்சுக்கு அறிக்கைகொடுத்தார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.
வீரபாண்டியாரின் அறிக்கையை பார்த்த ராமதாஸ் சற்று கோபமடைந்தாராம் .உடனடியாக, பா.ம.க தலைவர் ஜி.கே.மணியை பதிலறிக்கை கொடுக்கச் சொன்னார்.
திங்கள்கிழமை காலை, பா.ம.க தலைவர் ஜி.கே.மணி விடுத்துள்ள அறிக்கையில்,அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் அறிக்கை திடுக்கிட வைக்கிறது. அவர்அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை வன்மையாக மறுக்கிறேன். அவரது அறிக்கையில்,ஆண்டிமடம் தொகுதி மாநாட்டில், தி.மு.கழகத்தையும், தி.மு.க தலைவ ர் டாக்டர்கலைஞரையும் விமர்சனம் செய்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் எங்கள் அய்யா, அமைச்சர் குறிப்பிட்டுள்ளவாறு தி.மு.கவையோ, டாக்டர்கலைஞரையோ குறை கூறிப் பேசவில்லை. டாக்டர் அய்யா பேசிய பேச்சின்கேஸட்டை கொடுக்கிறேன். வேண்டுமானால் போட்டுக் கேட்டுப் பார்க்கட்டும்.
தமிழ்நாட்டில் பரவலாக ஒரு கும்பல் தொடர் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டுகலவரத்திற்கு காரணமாக இருந்து வருகின்றார்கள் என்று தான் பேசியுள்ளார்கள்.
ஆனால் பேசிய பேச்சுக்கள் இப்படியிருக்க, வேளாண்மைத்துறை அமைச்சர்வீரபாண்டி ஆறுமுகம் ஒரு பெரிய நீண்ட அறிக்கை கொடுத்திருப்பது நல்லதல்ல. இதுபெரிய வியப்பையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்துகின்றது. பேசாச பேச்சுக்குஇவ்வளவு பெரிய அறிக்கை தேவையில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஒருவர் சேலம் பாராளுமன்றத் தொகுதிதேர்தலில் தோல்விக்குக் காரணம் பா.ம.க தான் என்று முழுக்க முழுக்க உண்மைக்குமாறான ஒரு செய்தியை சொல்லி வருகின்றார்.
அதே போல் கூட்டணியில் இருந்து கொண்டே எங்கள் டாக்டர் அய்யா மீது சேற்றைவாரி வீசி வருகின்றார். ஆனால் கூட்டணியில் இருந்து கொண்டு எதைப் பற்றியும்பேசுவது கூட்டணி தர்மமாகாது என்று கூறும் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மேற்குறிப்பிட்டுள்ளவாறுஎங்கள் டாக்டர் அய்யா மீது தொடர்ந்து சேற்றை வாரி வீசிவருவதைப் பற்றி எதையும் பேச வில்லையே ஏன்?
இது கூட்டணி தர்மம் தானா? பேசப்படாத செய்திக்கு இவ்வளவு பெரிய அறிக்கைதேவையில்லை என்று கருதுகின்றேன். இவ்வாறு பா.ம.க தலைவர் ஜி.கே மணிஅறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 53 ன்று வருடங்களாக மூன்று கட்சிகளின் ஆட்சியை மாறி மாறி பார்த்த மக்கள்தற்பொழுது மாற்றத்தை விரும்புகிறார்கள்.
நாங்கள் மாற்றத்தை வரவேற்கின்றோம். முதலில் ஒரு சட்டமன்ற தொகுதியிலும்,பின்னர் நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும், அ.தி.மு.கவோடு சேர்ந்து, பாராளுமன்றஉறுப்பினர்களையும்., ஒரு மத்திய அமைச்சரையும் தி.மு.கவோடு சேர்ந்து 5பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுள்ளோம்.
நூறு கோடி மக்களை ஆளும் கட்சியில் பா.ம.கவும் ஒன்று. இது போன்ற மாநாடுகளில்மக்கள் பிரச்சனைகளை ஆராய்வதோடு, கட்சி வளர்ச்சி பணிகளையும் செய்கிறோம்.வரும் சட்டமன்றத் தேர்தலில், இரண்டாவது இடத்தை பா.ம.க பிடிக்கும், 2006-ல்தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று பேசினார் டாக்டர் ராமதாஸ்.
ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 2006 - ல் ஆட்சியைப் பிடிப்போம்என்று டாக்டர் ராமதாஸ் பேசியது, தி.மு.கவுடனான கூட்டணியை ராமதாஸ்விரும்பவில்லை என்பதையே காட்டுகின்றது என்கிறார்கள் தி.மு.கவில்.
திங்கள்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் கருணாநிதியிடம், பா.ம.ககூட்டணியில்லாமல் தி.மு.க வெற்றி பெற முடியாது என்று ராமதாஸ்பேசியிருக்கிறாரே என்று நிருபர்கள் கேள்வி கேட்க, அதற்கு நான் பதில் சொல்லவிரும்பவில்லை என்று பதில் சொன்னார் முதல்வர் கருணாநிதி.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க நீடிக்கும் என நினைக்கிறீர்களா? என்றுநிருபர்கள் கேட்க, நீடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று பதில் சொன்னார்தமிழக முதல்வரும், தி.மு.கழக தலைவருமான கருணாநிதி.
முதல்வர், நழுவலாக பதில் சொன்னாலும், பா.ம.கவுடன் கூட்டணி என்பதைதி.மு.கவும் விரும்பவில்லை., பா.ம.கவின் பார்வையும் அ.தி.மு.கவின் பக்கமேஎன்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications