பிஜியில் தொடரும் பதட்டம்
சுவா:
தென் பசிபிக் நாடான பிஜித் தீவில் புரட்சிக் கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட் மேல்பதிவு செய்யப்பட்ட வழக்கு முடிவுக்கு வரும் வரை தொடர்ந்து பதட்டம் இருக்கும்என்று கூறப்படுகிறது.
இதனால் பிஜித் தீவிற்கு நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பிஜித் தீவில் கடந்த மே மாதம் மகேந்திர செளத்ரி தலைமையில் ஆட்சி நடந்து வந்தது.செளத்ரி இந்தியர் என்பதால் பிஜியில் உள்ள கலகக் கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட்தலைமையில் கலகக்காரர்கள் செளத்ரியை பிணைக்கைதியாகப் பிடித்து வைத்தனர்.
பிஜியின் பூர்வீகக் குடிமக்கள்தான் பிரதமர் மற்றும் அதிபர் பதவியில் இருக்கவேண்டும் என்று போராட்டம் நடத்தனர். இதையடுத்து ராணுவ வீரர்களுக்கும், கலகக்கும்பலுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
அதற்குப்பின் மகேந்திர செளத்ரி விடுவிக்கப்பட்டார். அதற்குப்பின் பிஜியில் தற்காலிகபிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டார். இந்த நிலையில் கலகக் கும்பல் தலைவர் ஜார்ஜ்ஸ்பைட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஸ்பைட் மற்றும் 13 பேர் மீது தேசவிரோத வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தற்போதுபிஜியில் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம் பெருமளவில் குறைந்து வருகிறது.
ஜார்ஜ் ஸ்பைட்டின் வழக்கு தலைநகர் சுவாவில் விசாரணைக்கு வந்த போது அவரதுஆதரவாளர்கள் கோர்ட் முன் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் ஜார்ஜ் ஸ்பைட்வழக்கு முடியும் வரை பிஜித்தீவில் தொடர்ந்து பதட்டம் இருக்கும் என்றுகூறப்படுகிறது.
இதற்கிடையே நியுசிலாந்து சுற்றுப்பயண ஆலோசகர் ஒருவர் கூறுகையில், பிஜியில்வெளிநாடுகள் பல முதலீடு செய்து வருகின்றன. இங்கு தொடர்ந்து பதட்டம் நடந்துவருவதால் அந்நிய முதலீடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications