இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா வெற்றி
அகமதாபாத்:
இந்திய -ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒரு நாள் போட்டியில்இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கும் - ஜிம்பாப்வேக்கும் இடையே இரண்டாவது ஒரு நாள் போட்டிஅகமதாபாத்தில் இருக்கும் மொட்டேரா விளாையாட்டு அரங்கில் செவ்வாய்கிழமைநடைபெற்றது.இதில் இந்தியா ஜிம்பாப்வேயை 61ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய - ஜிம்பாப்வே நாடுகளுக்கிடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள்நடைபெற்று வருகின்றன. முதல் போட்டியில் இந்தியா ஜிம்பாப்வேயை மூன்றுவிக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் அகமதாபாத்தில் நடந்தஇரண்டாவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. துவக்கஆட்டக்காரராக அணித்தலைவர் கங்குலியும், டெண்டுல்கரும் களமிறங்கினர். ஆனால்அணியின் ஸ்கோர் 22 ஆக இருந்த போது டெண்டுல்கர் ஆட்டமிழந்தார். அதற்கு பின்ராகுல் டிராவிடும், கங்குலியும் சிறப்பாக ஆடினர். அணியின் ஸ்கோர் 197 ஆக இருந்தபோது ராகுல் டிராவிட் ரன் அவுட் ஆனார். அவர் 62 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்திய அணியின் தலைவர் கங்குலி 144 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்திருந்தது.
ஜிம்பாப்வே தரப்பில் ஒலோங்கோ 10 ஓவர்களில் 59 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைகைப்பறினார். ஃப்ரெண்ட் 10 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைகைப்பற்றினார். விலியோன் 7 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைகைப்பற்றினார். மரிலியர் 5 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைகைப்பற்றினார்.
இதையடுத்து 307 ரன்களை இலக்காக கொண்டு ஜிம்பாப்வே களமிறங்கியது. துவக்கம்முதலே ஜிம்பாப்வே விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. அவர்களால்இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. 50 ஓவர்களில்8 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-0 என்றுமுன்னணியில் இருக்கிறது.
இந்தியத் தரப்பில் ஜாகீர்கான் 6 ஓவர்களில் 24 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைகைப்பற்றினார்.வெங்கடேஷ் பிரசாத் 6 ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 1விக்கெட்டை கைப்பற்றினார்.டெண்டுல்கர் 10 ஒவர்களில் 53 ரன்கள் கொடுத்து 1விக்கெட்டை கைப்பற்றினார்.சுனில் ஜோஷி 8 ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்து 2விக்கெட்டை கைப்பற்றினார்.ஸ்ரீராம் 7 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்து 3விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
144 ரன்கள் எடுத்த இந்திய அணித்தலைவர் கங்குலி இன்றைய ஆட்டத்தின் சிறந்தஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications