சட்ட உதவியை நாடுவோம்: அசார், சர்மா, பிரபாகர்
ஹைதராபாத்:
கிரிக்கெட் வாரியத்தால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் அசாருதீன் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம்மேல் முறையீடு செய்ய இருப்பதாக அவருக்கு நெருங்கியவர்கள் கூறியுள்ளனர்.
இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்தவர் அசாருதீன். அவர் கிரிக்கெட் ஒழுங்கு நடவடிக்கை குழுவிடம், தன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகுறித்து மறு ஆலோசனை செய்யுமாறு கேட்டுக் கொள்வார் என தெரிகிறது.
அவர் சட்ட ஆலோசனை பெற்ற பின்பு என்ன செய்வது என்பது குறித்து முடிவெடுப்பார் எனவும் கூறப்படுகிறது. அசாருக்கு அளிக்கப்பட்ட தண்டனைதுர்திர்ஷ்டவசமானது என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
1984-ம் ஆண்டு அசாருதீன் இந்திய அணியில் இடம் பெற்றார். அவர் ஆடிய முதல் மூன்று ஆட்டங்களிலும் தொடர்ந்து மூன்று சதம் அடித்த போதுஹைதராபாத் நகரமே அவரை எண்ணி பெருமிதம் அடைந்தது. ஆனால் அவருக்கு இப்போது தண்டனை அளிக்கப்பட்டபின் ....?
ஒரு முறை உலகின் தலை சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவரான கவாஸ்கர், அசாருதீன் கடவுளால் இந்திய அணிக்கு வழஙகப்பட்ட வரப்பிரசாதம் என்றார். ஆனால் இப்போது....?
சங்கீதா பிஜ்லானியை இரண்டாவது மனைவியாக ஏற்றுக் கொண்டது தான் அசாருதீனின் இன்றைய துன்பங்களுக்கு காரணம் என பலரும் சொல்கின்றனர்.
சட்ட ஆலோசனைதான் மாற்றுவழி: பிரபாகர் வேதனை
டெல்லியில் மனோஜ் பிரபாகரிடம் அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து கேட்ட போது, யாரிடம் முறையீடு செய்வது கிரிக்கெட்வாரியத்திடமா அல்லது நீதிமன்றத்திலா என மறு கேள்வி எழுப்பினார். கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்னை அழிக்க வேண்டும் என்றநோக்கத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளது
எந்த முடிவையும் எடுக்கும் முன் எனது வக்கீலை கலந்து ஆலோசிக்க வேண்டும். எனக்கு வேறு எந்த வழியும் இல்லை என்றார்.
இது பாரபட்சமான தண்டனை: சர்மாவின் மனைவி
ஜடேஜாவையும், ஷர்மாவையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் ஷர்மாவின் மனைவி கூறுகையில், நாங்கள் நிச்சயம்ஏதாவது நடவடிக்கை எடுப்போம். எங்கள் வக்கீலுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம்.
கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பாரபட்சமாக செயல்பட்டிருக்கிறது. அனைவருக்கும் ஒரே மாதிரி தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications