பாக். எல்லையில் ராணுவம் சுட்டு 12 தீவிரவாதிகள் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே புதன்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 12 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
ஜம்முவிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் ரன்பீர்சிங்கபுரா பகுதியில் உள்ள இந்திய எல்லையான சாம்ராலா வில் நள்ளிரவு 1 மணிக்கு தீவிரவாதிகள்நுழைய முயன்றனர். அவர்களை அடையாளம் கண்டு விட்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் உடனடியாக அவர்களை விரட்டிக் கொண்டு சிறுது தூரம்சென்றனர்.
பின்னர் அவர்களைச் சரணடையுமாறு எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர்கள் அதைக் கண்டு கொள்ளாமல் சண்டையிடும்நோக்கத்தில் துப்பாக்கியால், எல்லைப் பாதுகாப்பு வீரர்களை நோக்கிச் சுட ஆரம்பித்தனர்.
இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே வெகுநேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இச்சண்டையில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
துணி வியாபாரியான மோஹிந்தர் பால் சிங் என்பவர் புதன்கிழமை அடையாளம் தெரியாத தீவிரவாதக் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப்பைச்சேர்ந்த இவர் எல்லைப் பகுதியில் அடிக்கடி துணி வியாபாரம் செய்வதற்காக ஜம்மு காஷ்மீர் வருவது வழக்கம்.
முன்னதாக, எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் இந்த வருடம் மட்டும் வங்க தேசத்தைச் சேர்ந்த 253 பேர், மியான்மரைச் சேர்ந்த (பர்மா) 73 பேரைக்எல்லைப் பகுதியில் அனுமதியின்றி நுழைந்தது தொடர்பாகக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications