2 வயது குழந்தைக்கு பேஸ் மேக்கர்: மதுரை டாக்டர்கள் சாதனை
மதுரை:
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டரை வயதுக் குழந்தைக்கு பேஸ் மேக்கர் கருவிபொருத்தி இருதய துடிப்பை சரி செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ராயவேலு பாலக் கொம்பை என்ற கிராமத்தை சேர்ந்தவர்தங்கமணி மற்றும் பேபி.
இவர்களது இரண்டரை வயது மகன் பிரவீன்ராஜ். இந்தக் குழந்தைக்கு பிறந்தது முதல் எட்டு மாதம் வரைநிமிடத்திற்கு முப்பது முதல் நாற்பது முறை வரை இருதய துடிப்பு இருந்தது. ப்ரவீன்ராஜூக்கு சில நேரங்களில்இருதய துடிப்பே இல்லாமலும் இருக்கும்.
சுயநினைவு இருக்காது:
அப்பொழுது ப்ரவீன்ராஜ் சுயநினைவை இழந்து கால், கைவலிப்பு போன்றவற்றால் அவதிப்பட்டான். இதைத்தொடர்ந்து ப்ரவீன்ராஜ் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் கண்ணன் பரிசோதனை செய்து இருதய நோய் சிகிச்சை பிரிவுக்கு அனுப்பினார்.
அங்கு மீண்டும் பரிசோதனை செய்ததில், இருதய பகுதிக்கு செல்லும் மின்சார உணர்வு சரியாக செல்லாததும்,இருதயத்தின் அருகில் டக்டஸ் ஆர்டியோசஸ் என்ற இணைப்பு ரத்தக்குழாய் அடைபடாமல் உள்ளது என்றும்கண்டு பிடிக்கப்பட்டது.
பேஸ் மேக்கர்:
இதையடுத்து, இருதயத்தை செயற்கை முறையில் செயல்பட வைக்கும் பேஸ்மேக்கர் கருவியை குழந்தைக்குப்பொருத்தி அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.
இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்கள் சுகுமார், மணிமாறன் மற்றும் கேசவமூர்த்தி ஆகியோர், முதலில்குழந்தையின் தொடையில் உள்ள ரத்தக்குழாயின் வழியாக தற்காலிக பேஸ் மேக்கரை பொருத்தி இருதய துடிப்பைசரி செய்தனர். பின்னர் நிரந்தர பேஸ்மேக்கர் கருவியை நெஞ்சு பகுதியில் பொருத்தி துடிப்பை அதிகப்படுத்தினர்.
பின்னர் இணைப்பு ரத்தக்குழாயை அடைக்க அறுவை சிகிச்சை செய்தனர். இது போன்ற சிகிச்சை லட்சத்தில் ஒருகுழந்தைக்குத்தான் ஏற்படும். இந்த சிகிச்சையால் பிரவீன்ராஜூக்கு 25 ஆண்டுகளுக்கு இருதயத்தில் எந்தவிதபிரச்சனையும் ஏற்படாது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications