வர்த்தக ஒப்பந்தத்திற்காக ஒரு ரத யாத்திரை
கோவை:
உலக வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வைஏற்படுத்த கன்னியாகுமரி முதல் மும்பை வரை ரத யாத்திரை நடத்த கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம் முடிவுசெய்துள்ளது.
கோவை வந்திருந்த கர்நாடக மாநில விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நஞ்சுண்டசாமி நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
மத்திய அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையால் விவசாயிகள் கடுமையாகப் பாதிப்படைந்துவருகின்றனர்.
உலக வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகள் ஒட்டு மொத்தமாகப் பாதிப்படைவர். விவசாயத் துறையில் நல்ல நல்லவிதைகள் எல்லாம், அந்நிய நாட்டு வீரிய விதைகளால் அழிக்கப்பட்டு விடும் சூழ்நிலை உருவாகி வருகிறது.
தாராளப் பொருளாதாரமயக் கொள்கையால், விவசாய விளைபொருட்களின் இறக்குமதி அதிகரிக்கும் நிலைஉருவாகி வருகிறது.
இதனால், இந்திய விவசாயிகளுக்கு உற்பத்திக் கேற்ற விலை கிடைக்காமல் கடும் நஷ்டத்திற்கு ஆளாக வேண்டியநிலை உருவாகி வருகிறது.
இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்தியா முழுவதிலும் ரத யாத்திரை நடத்த முடிவுசெய்துள்ளோம்.
இதன் முதற் கட்டமாக கன்னியாகுமரி முதல், மும்பை வரை ரத யாத்திரை நடத்துகிறோம். வரும் ஜனவ ரி மாதம்19ம் தேதி துவங்கும் இந்த ரத யாத்திரை கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி வழியாக, பெங்களூர், புனே சென்றுமும்பையை பிப்ரவரி 19ம் தேதி அடைகிறது.
பின்னர் மும்பை துறைமுகத்தில், இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்களைத் தடுத்து நிறுத்தி, அதனைக்கடலில் வீசி எரியும் போராட்டத்தை நடத்துவுள்ளோம். இவ்வாறு நஞ்சுண்ட சாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications