பிரதமரின் கருத்துக்கு கூட்டணிக் கட்சிகளே எதிர்ப்பு
டெல்லி:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது ஒரு தேசியப் பணி. இது இன்னும் நிறைவடையாத பணி என்று பிரதமர் வாஜ்பாய்கூறியுள்ளதற்கு அவரது தேசிய ஜனநாயக முன்னணியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சமதா கட்சி:
பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் சமதா கட்சி தான் முதலில் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. அக் கட்சியின் பொதுச்செயலாளர் சாம்பவ் கூறுகையில், கோவில் கட்டும் பணி கூட்டணி அரசின் செயல் திட்டத்திலேயே இல்லை.
கோவில் கட்டும் விஷயத்தை செயல் திட்டத்தில் (அஜெண்டா) சேர்க்கக் கூடாது என்று நிபந்தனை விதித்துவிட்டுத் தான்அரசாங்கத்தில் சேர்ந்தோம். இந்தப் பிரச்சனை நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படுவோம் என்றார்.
மம்தா பானர்ஜி:
ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுந்தீப் பண்டோபாத்யாயா கூறுகையில்,
பிரதமர் எந்த நிலையில் அப்படிப் பேசினார் என்பதை நாங்கள் பார்ப்போம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்டத்தைமீறாத வரை இப் பிரச்சனையை நாங்கள் பெரிதாக்க மாட்டோம் என்றார்.
தெலுங்கு தேசம்:
தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் எர்ரன் நாயுடு கூறுகையில், தேசிய ஜனநாயக முன்னணியின் செயல்திட்டத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுமானால் எங்கள் ஆதரவைத் தொடர்வதா இல்லையா என்பது குறித்து நிச்சயம்மறுபரிசீலனை செய்வோம்.
அரசின் செயல்பாட்டைக் கூட்டணிக் கட்சிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications