இன்று கொடிநாள்: முதல்வர் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாடு முழுவதும் வியாழக்கிழமை கொடிநாள் கடை பிடிக்கப்படுவதையொட்டி அனைவரும் தாராளமாக நிதி வழங்குங்கள் என்று முதல்வர் கருணாநிதிவேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆண்டு தோறும் டிசம்பர் 7 ம் தேதி கொடிநாள் கடை பிடிக்கப்படுகிறது. நாட்டைக் காக்கும் நற்பணியில் ஈடுபடும் வீரர்களின் தியாகங்களை மதித்துப்போற்றும் தீரத் திருநாளாகக் கொடிநாள் கடை பிடிக்கப்படுகிறது.
நாட்டு வரலாற்றில் சுடர் மணிகளாய் ஒளிவிடும் வீரர்களை நன்றியுடன் நினைவு கூர்வோம்.
டிசம்பர் 7 ம் நாளன்று நிகழும் கொடி விற்பனையில் பங்கு பெற்று கொடிநாள் நிதியை பெருக்கி உதவிகள் வழங்குவதன் மூலம் எல்லைப் புறங்களில்தொல்லைகளைத் தாங்கிக் காவல் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களின் உள்ளங்களுக்கு மகிழ்ச்சி தெரிவிப்போம் என்று முதல்வர் தனது கொடிநாள் செய்தியில்குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications