தீவிரவாதிகளுக்கு திமுக அரசு ஆதரவு: காங்கிரஸ் புகார்
சென்னை:
கருணாநிதி அரசு தீவிரவாதிகளுக்கு உதவியாக செயல்பட்டு வருவதால், அந்த அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக விடுதலை முன்னணி என்ற அமைப்பு வெப்சைட் அமைத்துள்ளது. இது நம் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும். தமிழக, கர்நாடக,கேரள எல்லைகள் மற்றும் இலங்கையின் ஒரு பகுதியை இணைத்தும் அகண்ட தமிழகம் என்ற பெயரில் அந்த வெப்சைட்டில் வரைபடம்கொடுக்கப்பட்டிருக்கிறது.
முதல்வர் கருணாநிதியே வீரப்பனை தமிழ் உணர்வு உள்ளவர் என பாராட்டியுள்ளார். தீவிரவாதிகள் வளர்வதற்கு இதுவும் காரணமாகும். எனவேதீவிரவாதிகளுக்கு ஊக்கம் அளித்து வரும் கருணாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டால் அதைகாங்கிரஸ் கட்சியினர் கிழித்து எறிவார்கள்.
பாபர் மசூதி இடிப்பு:
பாபர் மசூதி இடிக்கபட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியமூன்று பேரும் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.
அ.தி.மு.க. வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சேடப்பட்டி முத்தையா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடர்ந்த போதுஅவரை ராஜினாமா செய்யச் சொன்னதும் அவர் ராஜினாமா செய்தார்.அதே போல் பூட்டா சிங்கும் ராஜினாமா செய்தார்.
மற்ற கட்சியினரை ராஜினாமா செய்யச் சொன்ன வாஜ்பாய் இவர்கள் மூவரையும் ராஜினாமா செய்யச் சொல்லாதது எந்த வகையில் நியாயம்.இவர்கள் மூவரும் ராஜினாமா செய்யாவிட்டால் நாடாளுமன்றத்தில் போராடும் காங்கிரஸ் கட்சி தெருக்களில் நின்று போராடும்.
விவசாயிகள் பிரச்சனை
தமிழகத்தில் தேயிலை, தென்னை மற்றும கரும்பு விவசாயிகளின் பிரச்சனை குறித்து நான் சோனியா காந்தியிடம் விவரித்துள்ளேன். சோனியா காந்தி எனக்குபதிலாக வேறு யாரையாவது தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக நியமித்தால் அவரை நான் தலைவராக ஏற்று செயல்படுவேன் என இளங்கோவன்கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications