பாதுகாப்பு வேண்டி இலங்கை அரசுக்கு டாக்டர்கள் மிரட்டல்
கொழும்பு:
சர்வதேச சங்கங்கள் அல்லது செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் பாதுகாப்பான போக்குவரத்து வசதி செய்து கொடுக்காவிட்டால் மட்டக்களப்பை விட்டுவெளியேறுவோம் என்று அங்கு பணிபுரியும் 400 க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அரசு மருத்துவச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகமிருக்கும் இலங்கையின் கிழக்குப் பகுதியான திரிகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள அரசுமருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கில் டாக்டர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இவர்களில் 54 டாக்டர்கள் ஏற்கனவே மட்டக்களப்பை விட்டு வெளியேறி விட்டனர். இவர்கள் தங்களுக்குப் போதிய போக்குவரத்து வசதியைஏற்படுத்தித் தந்தால் தான் மட்டக்களப்பில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவோம் என்று கூறியுள்ளனர்.
அரசு மருத்துவச் சங்கத் தலைவர் விமல் ஜெயந்தா கூறுகையில், மன்னார், அம்பாரா, கல்முனை, அக்கரைப்பட்டு மற்றும் வவுனியா பகுதிகளில் பணிபுரிந்துவரும் டாக்டர்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். இல்லையேல் தலைநகர் கொழும்புக்குச் சென்று விடுவோம்என்று கூறியுள்ளனர்.
சமீபத்தில் மட்டக்களப்பில் டாக்டர்கள் சென்ற பஸ் கண்ணிவெடியில் சிக்கித் தகர்ந்தது. இதில் 3 டாக்டர்கள் உயிரிழந்தனர். இப்பகுதிகளில் வாழும்டாக்டர்கள் ஒவ்வொரு நிமிடமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வாழ வேண்டிய அபாயம் உள்ளது.
இதனால், சர்வதேச பாதுகாப்பு சங்கம் அல்லது செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் இலங்கை அரசு எங்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் சங்கம் முடிவெடுத்திருப்பதாக அவர் கூறினார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications