வாஜ்பாய் கொடும்பாவியை எரிக்க முயற்சி
சென்னை:
வாஜ்பாயின் கொடும்பாவியை எரிக்க முயன்றது தொடர்பாகப் பிரியங்கா பேரவையைச் சேர்ந்த 10 தொண்டர்கள்கைது செய்யப்பட்டனர்.
சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் வாஜ்பாய் பேசும் போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படவேண்டும் என்பது தேசிய உணர்வு.
அது என் தனிப்பட்ட உணர்வு அல்ல. எனவே அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். பாபர் மசூதிகட்டுவதற்கு வேறு இடத்தில் இடம் ஒதுக்கப்படும் என கூறினார்.
இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் 7-வது நாளாகசெவ்வாய்கிழமையும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் பிரியங்கா பேரவை என்ற அமைப்பைச் சேர்நத 10 தொண்டர்கள் வாஜ்பாயின்கொடும்பாவியை எரிக்க முயன்ற போது கைது செய்யப்பட்டனர்
இந்த தொண்டர்கள் வாஜ்பாய் ராமர் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்துவாஜ்பாயின் கொடும்பாவியை எரிக்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications