மேற்கு வங்காளத்தில் குடும்ப ஜெயில்
கல்கத்தா:
மேற்கு வங்க அரசு, 2001 ம் வருடம் ஜனவரி முதல் குடும்ப ஜெயில் முறையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
லகோலா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குடும்ப ஜெயிலில் 10 கைதிகள் தங்கள் குடும்பத்தினருடன் வாழலாம்.
மாநில அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்தத் திட்டத்தைத் தொடங்கி அதனைச் செயல்படுத்தும் முறைகளில் இயங்கி வருகிறது. இதற்கானஉத்தரவை முர்ஷிதாபாத்திலுள்ள லகோலா ஜெயிலுக்கு ஏற்கனவே மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொடூரமான மற்றும் மன்னிக்கமுடியாத குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள் குறைந்தது 7 அல்லது 7க்கும் மேற்பட்ட வருடங்கள் சிறை தண்டனைபெற்றிருப்பார்கள். அவர்களுக்கு மட்டுமே இந்த குடும்ப ஜெயில் வசதி செய்து கொடுக்கப்படும்.
மேலும், கற்பழிப்பு மற்றும் ரெளடித்தனத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு இந்த வசதி அளிக்கப்பட மாட்டாது.
லகோலா ஜெயிலில் இந்தக் குடும்ப ஜெயில் அமைக்கும் பணி முடிவடைந்து விட்டது. இந்த ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பெரும்பாலான கைதிகள் ஆயுள்தண்டனைக் கைதிகளாவர்.
அமைச்சர் கருத்து:
இதுகுறித்து, மாநில சிறைத்துறை அமைச்சர் பிஸ்வநாத் சவுத்ரி கூறுகையில், கைதிகளுக்கு மரியாதை அளிக்கும் விதத்தில் இந்த திட்டம்அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும் தாங்கள் தவறு செய்து விட்டுத் தண்டனை அனுபவிக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி ஏற்பட்டு அவர்கள் மன நெருக்கடிக்கு ஆளாகாதவகையிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
தற்போது 10 குடும்பங்கள் தங்கும் வகையில் பல அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதே ஜெயிலில் 100 அறைகள் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இடவசதியும் உள்ளது.
கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம். வரலாம். அவர்களது குழந்தைகள்பள்ளிகளுக்குச் சென்று வரலாம். அவர்களுக்கு எந்தவித கட்டுப்பாடோ, கெடுபிடியோ கிடையாது என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications