கள்ளக் காதலனுக்காக வளர்ப்புத் தந்தையைக் கொன்ற மகள்
கோவை:
வளர்ப்புத் தந்தையைக் கொலை செய்த மகளுக்கும், அவளது கள்ளக் காதலனுக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம்தீர்ப்பளித்தது.
மேலும் "ஆள் மாறட்டம் செய்த குற்றத்திற்காக மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் இவர்களுக்கு விதிக்கப்பட்டது.
கோவை சாயிபாபா காலனியில் ஒரு அடுக்குமாடி வீட்டில் குடியிருந்தவர் ராணி (30). இவருக்கும் சென்னையச் சேர்ந்ததொழிலதிபர் சுப்ரமணியத்திற்கும் தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பையடுத்து ராணிக்கு இந்த அடுக்குமாடி வீட்டைவாடகைக்கு பிடித்துக் கொடுத்தார் சுப்பிரமணி.
ராணியுடன் அவரது வளர்ப்புத் தந்தை பழனிச்சாமி (60) என்பவர் வசித்து வந்தார்.
இந் நிலையில் ராணிக்கும், கார் டிரைவர் பார்த்தசாரதிக்கும் தொடர்பு ஏற்பட்டது. பழனிச்சாமி இது குறித்து ராணியைக்கண்டித்துள்ளார். ஆனால், ராணி, பார்த்தசாரதியுடன் தொடர்பை விடவில்லை. இதையடுத்து பழனிச்சாமியை கொலை செய்துசெப்டிக் டேங்க்கில் போட்டு விட்டனர்.
செப்டிக் டேங்கில் கிடந்த பிணம் குறித்து அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது ராணியும்,பார்த்தசாரதியும் அவரை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது ராணி, தனது தந்தையை கொலை செய்யவில்லை என்றும், தனது தந்தைஉயிருடன் உள்ளார் என வெள்ளையன் என்பவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார். இதையடுத்து இந்த வழக்கில் திருப்பம்ஏற்பட்டது.
பின்னர், கொலையுண்டவர் வளர்ப்புத் தந்தை பழனிச்சாமி என்பதை அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டது.
இறுதியாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தணிகாசலம், இந்த வழக்கில் ராணிக்கும், பார்த்தசாரதிக்கும் ஆயுள் தண்டனைவிதித்து தீர்ப்பளித்தார். மேலும் ஆள் மாறட்டம் செய்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications