வீரப்பனைப் பிடிக்க பி.எஸ்.எப். படை கமாண்டர் நியமனம்
கோவை:
வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு படைக்கு கமாண்டராக ஜார்ஜ் சாக்கோ செயல்படுவார் எனஎல்லைப் பாதுகாப்பு படையின் டி.ஐ.ஜி. பீட்டர் தெரிவித்தார்.
சூலூர் விமானப் படைத் தளத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களை அழைத்துச் செல்ல எல்லைப் பாதுகாப்பு படையின்டி.ஐ.ஜி. பீட்டர் வந்திருந்தார். அவர் சூலூர் விமானப் படைத் தளத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வீரப்பனைத் தேடிப்பிடிக்கும் பணியில் ஆயிரம் எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள் ஈடுபடவுள்ளனர். இதன் முதல்கட்டமாகமணிப்பூரிலிருந்து 184 பேர் கோவை வந்து சேர்ந்துள்ளனர்.
மீதள்ள வீரர்கள் வரும் செவ்வாய், மற்றும் புதன்கிழமைகளில் வந்து சேர்கின்றனர். இந்தப் படையின் கமாண்டராக ஜார்ஜ் சாக்கோசெயல்படுவார்.
இரண்டு நாட்களுக்குள் எல்லைப் பாதுகாப்பு படையின் வீரர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அளிக்கப்படும். இதன்பின்னரே தேடுதல் வேட்டை துவங்கும். இங்கு வந்துள்ள படை வீரர்களுக்கு பல நவீன ஆயுதங்கள் மற்றும் யுக்திகள்வழங்கப்படும்.
உயிரினங்களில் இருந்து வெளியாகும் வெப்பத்தை அறியும் கருவி, இரவு நேரங்களில் ஆள் நடமாட்டத்தைக் காட்டும்பைனாகுலர் கருவி, வெடிகளைப் பொருத்தி வெடிக்கச் செய்யும் கருவிகள் ஆகியவை வழங்கப்படும்.
அஸ்ஸாம் காடுகளில் உறை பனி அதிகமாக இருக்கும். ஆனால், இங்கு பனி குறைவாகவே இருக்கிறது. இதனால், எளிதாக ஆள்நடமாட்டத்தை கண்டறிய முடியும். ஒரு நாளைக்கு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் 20 கிலோ மீட்டர் சுற்றளவில் தேடுதல்வேட்டையை நடத்த முடியும்.
தற்போது ரிமோட் சென்சிங் எனப்படும் செயற்கைக் கோள் மூல்மான கண்காணிப்பு ஏதும் தேவை இல்லை.
இந்த முறை நுண்ணறிவுப் பிரிவிற்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளோம். மேலும் கிராம மக்களின் நம்பகத் தன்மையைப்பொறுவதும் அவசியம். அஸ்ஸாம், மணிப்பூர் காடுகளில் உள்ள மக்களின் ஆதரவில் தான் எளிதாக வெற்றியைப் பெற முடிகிறது.
அரசு கேட்டுக் கொள்ளும் வரை வீரப்பனைப் பிடிக்க முகாமிடுவோம். கர்நாடக மற்றும் தமிழக அதிரடிப்படை வீரர்களின்ஒத்துழைப்பு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications