காளிமுத்துவைப் பார்க்க சென்னை விரைகிறார் ஜெ.
சென்னை:
மாரடைப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அதிமுக அவைத் தலைவர் காளிமுத்துவைப் பார்ப்பதற்காக ஹைதராபாத்திலிருந்துஜெயலலிதா செவ்வாய்க்கிழமை சென்னை வருகிறார்.
அ.தி.மு.க அவைத் தலைவர் காளிமுத்துக்கு திங்கள்கிழமை தீடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. நினைவிழந்த நிலையில் உடனடியாக அவர் அப்பல்லோமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலையும், மதியம், இரண்டு தடவை காளிமுத்துவுக்கு ரத்த வாந்திஏற்பட்டது. வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது
48 மணி நேரத்திற்குப் பிறகுதான் காளித்துவின் உடல் நிலை குறித்து சொல்ல முடியும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடல் நிலை தொடர்ந்துகவலைக்கிடமாகவே இருந்தது.
காளிமுத்துவின் குடும்ப டாக்டர் தேவராஜன் , இருதய நிபுணர் டாக்டர் நசீம் ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
செவ்வாய்க்கிழமை காலை அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. என்றாலும் அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயேவைக்கப்பட்டுள்ளார். 24 மணி நேரம் டாக்டர்கள் அருகில் இருந்து அவரை கவனித்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் இருக்கும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு இந்த தகவல் உடனடியாக தெரிவிக்கப்பட்டது.
அவர் உடனே டெலிபோனில் அப்பல்லோ டாக்டர்களுடன் பேசினார். காளிமுத்து உடல் நலம் பற்றியும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும்கேட்டறிந்தார். செவ்வாய்க்கிழமை காலையிலும் அவர் போன் மூலம் காளிமுத்துவின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
காளிமுத்துவை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரிப்பதற்காக செவ்வாய்க்கிழமை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வருகிறார் ஜெயலலிதா.
த.மா.கா தலைவர் மூப்பனார், முன்னாள் அமைச்சர்கள் எஸ். ஆர்.பாலசுப்பிரமணியம் உள்பட பல கூட்டணிக் கட்சித் தலைவர்களும் காளிமுத்துவைமருத்துவமனையில் சென்று பார்த்து வந்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications