மூப்பனார் தலைமையில் 3 வது அணி
திண்டுக்கல்:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் மூப்பனார் தலைமையில் 3 வது அணி ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று எம்.ஜி.ஆர்.அதிமுக பொதுச்செயலாளரும்,எம்.பி.யுமான திருநாவுக்கரசு கூறினார்.
அவர் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
நாங்கள் அடுத்த தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இடம்பெறுவோம். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டநாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்.
அதே சமயம் அயோத்தி விவகாரத்தை அரசியலாக்கி மத்திய அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் நினைத்தால் அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம்.
ஜெ. யின் பகல் கனவு:
அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று, தனித்தோ, கூட்டணி அமைத்தோ வெற்றி பெறலாம் என்று ஜயலலிதா பகல் கனவு காண்கிறார். அவரதுகனவு பலிக்காது. அது கானல் நீராகும்.
மூப்பனார் தலைமையில் 3 வது அணி:
தமிழகத்தில் மூப்பனார் தலைமையில் 3 வது அணி அமையும் வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளன. 3 வது அணியோ, 4 வது அணியோ எத்தனை அணிகள்வந்தாலும் நாங்கள் திமுக கூட்டணியில் தான் இடம் பெறுவோம்.
ஜெயலலிதாவை விட முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் நல்லாட்சி புரிந்து வருகிறார். ஜெயலலிதாவை, முதல்வர் கருணாநிதியுடன் ஒப்பிடத் தேவையில்லை என்றார்திருநாவுக்கரசு.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications