இன்னொரு ஈவ் டீசிங் .. 14 வயது சிறுமி பலி
மேலூர் (மதுரை):
மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த ஈவ் டீசிங் கொடுமையால் 14 வயது சிறுமி விஷம்குடித்து தற்கொலை செய்து இறந்து போனார்.
தமிழகத்தில் ஈவ் டீசிங் என்னும் பெண்களை கேலி செய்யும் பழக்கம் அதிகரித்துவருகிறது. சரிகா ஷா என்ற கல்லூரி பெண் ஆட்டோவில் வந்தவர்களால் கேலிசெய்யப்பட்டு, அந்த ஆட்டோ மோதியதில் விபத்துக்குள்ளாகி நினைவு திரும்பாமல்தனது பிறந்த நாளன்றே இறந்து போன கொடுமை நடந்தது தமிழகத்தில் தான்.
அதற்கு பிறகு விழித்துக் கொண்ட தமிழக அரசு ஈவ் டீசிங் செய்பவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. நடவடிக்கையும் எடுத்தது. ஆனால் ஈவ்டீசிங் குறைந்தபாடில்லை. ஆங்காங்கு நடந்து இளம் பெண்களின் உயிர்களை குடித்துக்கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில், ஈவ் டீசிங் கொடுமைக்கு மேலும் ஒரு பெண் மேலூரில்பலியாகியிருக்கிறார்.
மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகே உள்ள டி.மாணிக்கம்பட்டியைச் சேர்ந்தநாச்சான் என்ற விவசாய கூலித் தொழிலாளியின் மகள் மஞ்சம்மாள் (14). இவர்தோட்ட வேலை பார்த்துவந்தார்.
இவர் வேலைக்கு செல்லும் போது வாலிபர்கள் சிலரால் ஈவ் டீசிங் கொடுமைக்குஆளானார்.
அதே ஊரில் இருக்கும் மகாலிங்கம், சுந்தரலிங்கம், ராமன், குமார், முனியாண்டி, ரவி,கண்ணன், இன்னொரு ராமன் ஆகிய 8 பேரும் மஞ்சம்மாளின் கையைப் பிடித்துஇழுத்து கேலி செய்துள்ளனர். தொடர்ந்து இது போன்ற சம்பவம் நடந்துகொண்டிருந்தது.
இந்த நிலையில், சம்பவத்தன்று 8 பேரும் மஞ்சம்மாளை மான பங்கம் செய்யவும்முயன்றிருக்கிறார்கள். இது குறித்து மஞ்சம்மா தன் தந்தையிடம் கூறி அழுதிருக்கிறார்.
ஈவ் டீசிங் கொடுமை தாங்காமல் அவர் மனம் வருந்தி பூச்சி மருந்து குடித்துமஞ்சம்மாள் தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடலை மேலூர் சப் - இன்ஸ்பெக்டர் கைப்பற்றி விசாரணை செய்தார்.
ஈவ் டீசிங் செய்த 8 பேர் மீதும் புகார் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார்விசாரணை செய்து வருகிறார்கள்.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications