அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் .. தி.க

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

கோவில்களில் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் அர்ச்சராகத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசுஎடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகம் கோரியுள்ளது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி டிசம்பர் 29-ம் தேதி தமிழகம் முழுவதிலும் மறியல் போராட்டம் நடத்தவும்திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் நடந்த அந்தஅமைப்பின் மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில்இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

ஜாதி ஒழிப்பு, தீண்டாமைப் பேயை விரட்டுதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 1970ம் ஆண்டுஅனைத்து ஜாதியினரும் அர்ச்சராக வகை செய்யும் சட்டத்தை அப்போதைய திமுக அரசு கொண்டு வந்தது. அதைஎதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த சட்டத்தின் மூலம், மத விதிகள் தெரியாதவர்கள் அர்ச்சராகி விடுவார்களோ என்று மனுதாரர்கள்அச்சப்படுவதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி தெரிவித்தார். ஆனால் சட்டம் செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்புதரவில்லை. பின்னர் இதுதொடர்பாக முடிவு செய்ய எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில், நீதிபதி மகராஜன்தலைமையிலான கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷன் அறிக்கையை முதல்வர் எம்.ஜி.ஆர். ஏற்றார். ஆனால்எம்.ஜி.ஆருக்குப் பின் அது அமல்படுத்த முடியாமல் போனது.

இந்த நிலையில், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, திருச்சி மாவட்டத்திலஏற்படுத்தினார். 69 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வகைசெய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இது கிடப்பில் போடப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சராகும் வாய்ப்பை தர வேண்டும் என்று கோரி டிசம்பர்29-ம் தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தை நடத்த திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது என்பதுஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தி.கவை பிரிவினைவாத அமைப்புகளோடு சேர்த்துப் பேசுவதைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+