கோருடன் இணைந்து செயல்படுவேன் .. புஷ்

Subscribe to Oneindia Tamil

ஆஸ்டின் (யு.எஸ்.):

அதிபர் தேர்தலால் நாட்டுக்கு ஏற்பட்ட ரணத்தைக் குணப்படுத்தும் விதத்தில் அல் கோருடன் இணைந்துசெயலாற்றுவேன் என்று அமெரிக்காவின் 43-வது அதிபராக பதவியேற்கவுள்ள ஜார்ஜ் டபிள்யூ. புஷ் ஜூனியர்கூறியுள்ளார்.

கோர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளதால், புஷ் அடுத்த அதிபராகிறார். அவரது முடிவு அறிவிக்கப்பட்டஒரு மணி நேரத்திற்குப் பிறகு, டெக்ஸாஸ் மாநில கவர்னர் மாளிகை வளாகத்தில் பெரும் திரளாக கூடியிருந்தபொதுமக்கள் மத்தியில் புஷ் பேசினார்.

அவர் பேசுகையில், கோர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவருக்கு நன்றி தெரிவிக்கநான் கடமைப்பட்டுள்ளேன். அடுத்த வார துவக்கத்தில் இருவரும் வாஷிங்டனில் சந்தித்துப் பேசுவோம்.

கடுமையான போட்டி காரணமாக ஏற்பட்டுள்ள காயத்தை ஆற்றுவதில் இருவரும் இணைந்து செயல்படுவோம்.

அமெரிக்காவுக்கும், அமெரிக்கர்களுக்கும் நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். நமது தேர்தல் முறையில் உள்ளகுளறுபடிகளை அமைதியான முறையில் சரி செய்து கொள்ளும் திறமை நமக்கு உள்ளது.

அடுத்த அதிபராக சேவை செய்யும் எனக்குக் கொடுத்த அமெரிக்க மக்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் புஷ்.

இத்தேர்தலில் புஷ்ஷை விட கோருக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்தன. புஷ்ஷுக்கு 49,820,518 வாக்குகள்கிடைத்தன. கோர், 50,158,094 வாக்குகள் கிடைத்தன. இருப்பினும், அதிபரைத் தேர்வு செய்வதற்குத் தேவையானஎலக்டோரல் வாக்குகள் புஷ்ஷுக்குக் கூடுதலாக கிடைத்ததால், அவர் அதிபராகி விட்டார். இதற்கு புளோரிடாமாநில வாக்குகள் புஷ்ஷுக்கு பெருமளவில் உதவியாக இருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+