முதுகில் குத்துகிறார் கருணாநிதி .. லத்தீப் புகார்

Subscribe to Oneindia Tamil

கோயம்பத்தூர்:

சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு தருவதாகக் கூறிக் கொண்டு அவர்கள் முதுகில்குத்திக் கொண்டுள்ளது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு என்று இந்திய தேசியலீக் தலைவர் அப்துல் லத்தீப் கூறியுள்ளார்.

கோவையில், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அயோத்தி குறித்து கருத்துத்தெரிவித்த பிரதமர் வாஜ்பாய் பதவி விலக வேண்டும்.

அயோத்தி விவகாரம் குறித்து பிரதமர் தெரிவித்த கருத்துக்கள் முஸ்லீம்களைவருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு மன்னிப்பு கேட்டால்தான், முஸ்லீம்களின்மன்னிப்பை வாஜ்பாய் பெற முடியும்.

மிகவும் பொறுப்பு வாய்ந்த பொறுப்பில் உள்ள வாஜ்பாய் போன்ற தேசியத்தலைவர்களிடமிருந்து இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கை வருவது வருத்தம்தருவதாக இருக்கிறது. இதுபோன்ற அறிக்கைகள் வன்முறைக்கே வித்திடும்.

ராமாயணத்தின் உண்மையான உணர்வுகள் சங் பரிவார் அமைப்புகளுக்கும், பாரதீயஜனதாவுக்கும் தெரியாது. ராமாயணத்தில், ராமன், மரியாதா புருஷோத்தமன் என்றுவர்ணிக்கப்பட்டுள்ளான். இதை முதலில் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு தருவதாகக் கூறிக் கொண்டு அவர்கள் முதுகில்குத்திக் கொண்டுள்ளது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.

வருகிறது சட்டப்பேரவைத் தேர்தல், திமுகவுக்கு கொடுக்கப்படும் கடைசிவாய்ப்பாகும். கருணாநிதி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி, காணாமல்போய் விட்ட அவரது கொள்கைகளைத் தேடும் பணியில் ஈடுபடுவார் என்றார் லத்தீப்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+