தொடரும் வார்த்தைப் போர் .. இழுபறியில் இலங்கை அமைதி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருவதால், அங்கு அமைதிப்பேச்சுவார்த்தை துவங்குதவற்கான அறிகுறியே தென்படவில்லை.

கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதி மாவீரர் தினத்தன்று பிரபாகரன், புலிகள் ரேடியோவில் பேசுகையில்,நிபந்தனையற்ற பேச்சு வார்த்தைக்கு தயார் என கூறியிருந்தார். ஆனால் அதே சமயம் யாழ்ப்பாணத்தில் போர்நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் கூறினார்.

பிரபாகரன் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு தயார் என கூறியிருப்பது குறித்து இலங்கையின் வெளியுறவுத்துறைஅமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கருத்து தெரிவிக்கையில், இப்போது பேச்சு வார்த்தைக்கான காலம் கனிந்துவந்துள்ளது. ஆனால் அரசு போர் நிறுத்தம் செய்ய இயலாது என தெரிவித்தார்.

தமிழ் கட்சியான இயக்கமான தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி இலங்கை அரசை குறை கூறியுள்ளது. இதன்துணைத் தலைவர் ஆனந்தசாகரி கூறுகையில், பிரபாகரன் இப்போதுதான் முதல் முறையாக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்திருக்கிறார்.

எனவே போர் நிறுத்தம் கிடையாது என கூறி விடுதலைப் புலிகளை பேச்சு வார்த்தையிலிருந்து பின் வாங்க செய்துவிடக் கூடாது என்று அது கூறியுள்ளது.

அரசியல் தரப்பில் பல கருத்துக்கள் நிலவி வந்தாலும், ராணுவமும், விடுசலைப் புலிகளும் தொடர்ந்து போரில்ஈடுபட்டு வருகின்றனர். பிரபாகரன் இரு வாரங்களுக்கு முன் அமைதிப் பேச்சு வார்த்கைக்கு சம்மதித்த பின் புலிகள்பல தாக்குதல்களில் பொது மக்களை குறி வைத்து தாககுதல் நடத்தி வருகின்றனர்.

இனப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருமாறு சர்வதேச நாடுகள் இலங்கையை வற்புறுத்தி வருகின்றன.இலங்கைக்கு, பாதுகாப்பு பணிகளுக்காக மட்டும் 83 பில்லியன் செலவாகிறது. மேலும் நிதிநிலையிலும் பெரும்பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

விடுதலைப்புலிகள் பிரிட்டனில் தலைமையகம் அமைத்து, நிதி வசூலும் செய்து வருகின்றனர். அந்நாடு விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்தால் அவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். அது அவர்களை கவலை கொள்ளவைத்திருக்கிறது.

இலங்கை அரசு பிரிட்டன் அரசை விடுதலைப் புலிகள் அமைப்பை தீவிரவாத அமைப்பு என கூறி தடைசெய்யுமாறு கோரி வருகிறது. தங்கள் கோரிக்கை நிராகரிப்பட்டால் அது தங்களுக்கு பெரும் ஏமாற்றமாகும் எனஇலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+