முறைகேடு செய்த ஊராட்சித் தலைவர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

கோவை:

பொள்ளாச்சி அருகே முறைகேட்டில் ஈடுபட்டதாக ஊராட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

ராமபட்டணம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்த கார்த்திகேயன், ஏற்கனவே பல்வேறு புகார்களின் அடிப்படையில்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கார்த்திகேயன் பதவி நீக்கத்தையடுத்து அந்த ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவராக இருந்தஅம்சவேணி என்பவர், தலைவர் பொறுப்பு வகித்து வந்தார்.

அம்சவேணி தலைவரான பிறகு, ஊராட்சிக் கூட்டத்தில் 2 லட்ச ரூபாயில் தெரு விளக்குகள் வாங்க அனுமதி கோரப்பட்டது.இதற்கு மன்றக் கூட்டம் அனுமதியளித்தது. பின்னர், முதல் கட்டமாக 25 விளக்குகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதன் பின்னர்கூடுதலாக 8 விளக்குகள் வாங்கப்பட்டது.

இந்த மின் விளக்குகளை திருப்பூரில் உள்ள ஒரு எலெக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம் வழங்கியது. அந்த நிறுவனத்திற்கு ஊராட்சிஒன்றியத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த அமசவேணி செக் வழங்கினார்.

அலுவலக நடைறையைப் பின்பற்றாமல், அம்சவேணி இந்த செக்கை அளித்துள்ளார். எனவே மாவட்ட கலெக்டர்உத்தரவின்பேரில், செக் திரும்ப பெறப்பட்டது. மேலும், இதில் அம்சவேணி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி, மாவட்டகலெக்டர் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+