இலங்கை அகதிகள் வந்த படகு பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கையிலிருந்து அகதிகளை ஏற்றி வந்த படகை கடற்படை வீரர்கள் பறிமுதல் செய்து படகை ஓட்டி வந்தவரையும் கைதுசெய்தனர்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவ வீரர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது.இதனால் அங்கிருந்து அகதிகள் தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர்.

திங்கள்கிழமை 30 அகதிகள் தனுஷ்கோடி வந்தனர். அவர்கள் இலங்கையின் அரிச்சமுனை என்ற இடத்திலிருந்து படகு மூலம்வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ரூ 2,000 கொடுத்து படகில் வந்தனர்.

இந்திய கடற்படை வீரர்கள், படகை ஓட்டி வந்த பிரான்சிஸ் (48), சண்முகம் (25) உள்ளிட்ட 3 பேரை கைது செய்து படகையும்பறிமுதல் செய்தனர்.

அகதிகளை தாசில்தாரும், சப்- இன்ஸ்பெக்டரும் விசாரணை செய்த பின் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

அகதிகளில் ஒருவரான மகேஸ்வரி (43) நிருபர்களிடம் கூறுகையில், இலங்கை அச்சுவேலி பகுதியில், விவசாய வேலை செய்துவந்தோம். சண்டை காரணமாக நிம்மதியாக வாழ முடியவில்லை.

இளம் பெண்கள் சித்தரவதை செய்யப்படுகிறார்கள். இலங்கை ராணுவத்தின் தொல்லை தாங்காமல் என் மகனுடன் இங்கு வந்துவிட்டேன் என கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+