பஸ் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தர்மபுரியில் புதன்கிழமை விபத்துக்குள்ளான தனியார் பேருந்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ 10,000 நிவாரணநிதி அளிக்கப்படும என தமிழக முதல்வர் அறிவிததுள்ளார்.
புதன்கிழமை தர்மபுரியில் இருக்கும் ஊத்தங்கரைக்கு அருகே தனியார் பேருந்து லாரியுடன் மோதி ஏரிக்குள்விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த கோர விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ 10,000 நிவாரண தொகையாக வழங்கப்படும் எனதமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இந்த நிவாரணத் தொகை தனியார் வாகன விபத்து நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும என முதல்வர்அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தொகையை உடனே அளிக்குமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications