தந்தை வழியில் தனயன்
வாஷிங்டன்:
தந்தையின் வழியில் அதிபர் பதவியில் அமரும் இரண்டாவது தனயன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜார்ஜ்புஷ் ஜூனியர்.
ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அல்கோர் நாடு முழுவதும் நடந்த கருத்துக் கணிப்பில் அடுத்த அதிபராக வருவார்என கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான போது குடியரசுக் கட்சி வேட்பாளர் புஷ்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி பெற்றார். பல்வேறு இழுபறிக்குப் பின் தற்போது புஷ் அதிபராவதுஉறுதியாகி விட்டது.
அதிபராக பதவியேற்க இருக்கும் புஷ் ஜூனியர், முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மூத்த மகனாவார். இவரைப்போலவே முன்னாள் அதிபர் குவின்சி ஆடம்சைப் பின்பற்றி அவரது மகன் ஜான் குவின்சி ஆடம்சும் அமெரிக்கஅதிபராக இருந்தார்.
புஷ் ஜூனியரைப் போலவே, ஜான் குவின்சி ஆடம்சும் அதிபர் பதவிக்கு வர பெரும் போராட்டங்களைசந்தித்தவர். 1824-ம் ஆண்டு ஜான் குவின்சி ஆடம்ஸ் தேர்தலில் மக்கள் வாக்குகளும கிடைக்கவில்லை,எலக்டோரல் பிரதிநிதிகள் வாக்குகளும் கிடைக்கவில்லை. இருப்பினும், வெள்ளை மாளிகை பிரதிநிதிகளால் அவர்அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications