லாரா சதம் .. வலுவான நிலையில் மே.இ. தீவுகள்
அடிலைட்:
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மேற்குஇந்தியத் தீவுகள் அணியின் பிரையன் லாரா சதம் எத்டுத்தார்.
அடிலைட் நகரில் வெள்ளிக்கிழமை இப்போட்டி துவங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள்அணி முதலில் பேட் செய்தது. துவக்கத்தில் விக்கெட்டுகளை விறுவிறுவென வீழ்ந்தாலும் கூட, முன்னாள் கேப்டன்பிரையன் லாராவும், இப்போதைய கேப்டன் ஜிம்மி ஆடம்ஸும் நின்று ஆடி, சிறுகச் சிறுக ரன்களைச் சேர்த்தனர்.

ஆட்ட நேர முடிவிற்கு சில நிமிஷங்களுக்கு முன்பு இந்தத் தொடரில் தனது முதல் சதத்தை எட்டினார் லாரா. இந்தப்போட்டியில் முதலில் லாரா கலந்துகொள்வதாக இல்லை. காயம் காரணமாக அவர் கலந்து கொள்வது சந்தேகத்தில்இருந்தது. ஆயினும் கூட கடைசி நிமிடத்தில் தனது வருகையை உறுதி செய்தார் லாரா.
மிகவும் வசதியான வகையில், தனது 15-வது டெஸ்ட் சதத்தை எட்டினார் லாரா. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இது6-வது சதமாகும் இது. மொத்தம் 199 நிமிடங்கள் களத்தில் இருந்து, 140 பந்துகளைச் சந்தித்து 100 ரன்களைஎட்டினார் லாரா. மெக்கில் பந்தில் 3 ரன்கள் எடுத்து தனது சதத்தை எட்டினார் லாரா.
முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் லாரா சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. இரண்டுபோட்டிகளின் நான்கு இன்னிங்ஸ்களிலும் 0, 4, 0, 17 என லாராவின் ஸ்கோர் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா ஏஅணியுடன் நடந்த போட்டியில் இரட்டை சதம் எடுத்து தனது அதிரடியை உணர்த்தினார் லாரா. இந்தப் போட்டியில்முற்றிலும் வித்தியாசமான லாராவை ரசிகர்கள் பார்த்தனர்.
மெக்கிராத்தையும், கில்லஸ்பியையும் அடித்து நொறுக்கினார். அவர்களது பந்துகளை எல்லாம், பவுண்டரிக்குஅனுப்பினார். அவர்களது பந்துகளில் தொடர்ந்து மூன்று பவுண்டரிகளை அடித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications