தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் சட்டவிரோதம்?
டெல்லி:
தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை உடனடியாகக் கைவிடாவிட்டால் ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இருப்பினும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை பணிக்குத் திரும்ப மாட்டோம் என்று தபால் துறைஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் கடந்த 11நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் நாடு முழுவதும் தபால்பட்டுவாடா ஸ்தம்பித்தது.
இதற்கிடையே, தபால் ஊழியர்கள் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று மத்தியஅரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2 வது சுற்றுப் பேச்சுவார்த்தை:
தபால் ஊழியர்கள் பிரச்சனை 11 நாட்களாக நீடித்து வரும் நிலையில் மத்திய அரசு வியாழக்கிழமை, தபால்ஊழியர்கள் சங்கத்துடன் 2 வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதுகுறித்து தபால் ஊழியர்கள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வேலை நிறுத்தம் தொடர்பாகமத்திய அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இருப்பினும் எங்களது கோரிக்கைகள்நிறைவேற்றப்படும் வரை நாங்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட மாட்டோம் என்றார்.
இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தபால் ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. சில கோரிக்கைகள்இன்னும் பரிசீலனையில் உள்ளது. இதை அவர்களிடம் தெளிவாகக் கூறிவிட்டோம். இந்நிலையில் விடாப்பிடியாகஅவர்கள் வேலைநிறுத்தத்தைக் கைவிடமாட்டோம் என்று கூறிக் கொண்டிருந்தால் அவர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்விஷயத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளதால், நாங்கள் விரைவில் இப்பிரச்சனையில் ஒரு முடிவுஎடுத்தாக வேண்டும். எனவே அத்தியாவசியப் பணிகள் பராமரிப்பு சட்டத்தை அமல்படுத்த (எஸ்மா) உள்ளது.
வேலைநிறுத்தம் சட்டவிரோதம்:
இந்நிலையில் தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.பொதுமக்கள் சேவையில் உள்ள எந்த ஒரு நபரும், பணியில் உள்ள போது, 7 நாட்களுக்கு மேல் வராமல்இருந்தால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று தொழிற்சாலை தாவா தட்டத்தில் கூறப்பட்டுள்ளதுஎன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கவனஈர்ப்புத் தீர்மானம்:
இதற்கிடையில் வேலை நிறுத்தம் தொடர்பாக லோக்சபாவில் வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications