ரூ. 12,000 லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

நிலத்தை சர்வே செய்வதற்கு ரூ.12,000 லஞ்சம் கேட்ட நகராட்சி பொறியாளர் கைதுசெய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருவொற்றியூர் அருகேயுள்ள எர்ணாவூரைச் சேர்ந்தவர் சேகர்.இவர் ஒரு பதிவு செய்யப்பட்ட காண்டிராக்டர். இவருக்கு அப்பகுதியில், ஒரு கழிவுநீர்க் கால்வாய் கட்ட காண்டிராக்ட் கிடைத்தது.

இதையடுத்து கழிவு நீர்க் கால்வாய் கட்டுவதற்காக தேர்வு செய்த இடத்தை சர்வேசெய்து தருமாறு நகராட்சி பொறியாளர் இளங்கோவனிடம், சேகர் கோரியுள்ளார்.ஆனால் சர்வே செய்ய வேண்டுமானால், ரூ. 12,000 லஞ்சம் தருமாறு இளங்கோவன்கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க மறுத்த சேகர், போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார்,இளங்கோவன் கேட்ட லஞ்சப் பணத்தை அவரிடம் கொண்டு போய் கொடுக்குமாறுசேகரிடம் கூறினர். இதையடுத்து போலீஸ் யோசனைப்படி லஞ்சப் பணத்தைஇளங்கோவனிடம், சேகர் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீஸார் கையும்,களவுமாக இளங்கோவனைக் கைது செய்தனர்.

மேலும், இளங்கோவன் வீட்டில் சோதனை நடத்தி ரூ. 43,000 லஞ்சப் பணத்தைப்பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பொறியாளர் இளங்கோவன், கோர்ட்டில்ஆஜர் படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் மதுராந்தகம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+