புலிகள் நகரை இலங்கை ராணுவம் கைப்பற்றியது
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியில் ராணுவம் புதிய தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதில், இதுவரை விடுதலைப் புலிகள்வசம் இருந்து வந்த மேற்கு நுனவில் நகரின் சில பகுதிகள் ராணுவத்தின் வசம் வந்தது.
கினிஹாரா என்ற பகுதியில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு இந்தத் தாக்குதல் தொடங்கியது. இந்த மோதலில்விடுதலைப் புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்புத் துறை செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் சனத் கருணரத்னே கூறுகையில், கைத்தடி பகுதியை நோக்கிதற்போது ராணுவம் முன்னேறி வருகிறது. அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ள விடுதலைப் புலிகள் பாதுகாப்பானஇடத்தைத் தேடி நகர்ந்து செல்கிறார்கள்.
ராணுவ நடவடிக்கை மிகவும் வெற்றிகரமாக இருந்தது. விடுதலைப் புலிகள் தரப்பில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகஅனுமானிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் சேத விவரம் குறித்துத் தெரியவில்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications