அதிபராகிறார் முஷாரப்?
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் செயல் அதிகாரியாக உள்ள ராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த ஜெனரல் பெர்வீஸ் முஷாரப்,அந்நாட்டு அதிபர் பதவியைக் கைப்பற்ற முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் பிரதமர் பதவி முறையை ஒழித்து விட்டு, அதிபர் ஆட்சி முறையைக் கொண்டு வரவும் அவர்திட்டமிட்டுள்ளார். முதல் அதிபராக தானே வரவும் அவர் நினைப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான சட்ட மசோதா தயாராகிக் கொண்டிருப்பதாகவும், தேவையான சட்டத் திருத்தம் விரைவில்மேற்கொள்ளப்படும் என்று தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அவர் ரபீக் தரார், உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால், தன்னை, பதவியிலிருந்து விடுவிக்குமாறுஅரசிடம் கேட்டுக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளிக்கிழமை இரவு கூட்டப்பட்ட உயர் ராணுவ தளபதிகள் கூட்டத்தில்விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ராணுவ ஆட்சியாளர் என்ற வட்டத்திலிருந்து வெளிவந்து ஆட்சியாளர்என்ற புதிய அந்தஸ்தில் அமர முஷாரப் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பேச்சுஅடிபடுகிறது.
இருப்பினும், ராணுவப் புரட்சிக்குப் பின் முடக்கப்பட்ட மாநில சட்டசபைகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு மீண்டும்உயிர் தரப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது.
முஷாரப் அதிபர் பதவிக்கு வந்தால், இலாஹி பக்ஷ் சூம்ரா அல்லது வாசிம் சஜ்ஜத் ஆகியோரில் ஒருவர் பிரதமர்பதவியில் நியமிக்கப்படலாம் என்று இப்போதே பேச்சு அடிபடத் துவங்கி விட்டது. அதன் பிறகு அமைக்கப்படும்இடைக்கால அமைச்சரவையில், முன்னாள் அதிபர் ஜியா உல் ஹக்கின் மகன், இஜாஸ் உல் ஹக், பக்கீர் இமாம்,மியான் அஸார் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications