இந்தியா பலம் பொருந்திய நாடு .. காலின் பாவல்
வாஷிங்டன்:
இந்தியாவை பிராந்திய அளவில் பலம் பொருந்திய நாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும் என்றுஅமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவியேற்கவுள்ள காலின் பாவல் கூறியுள்ளார்.
ஜார்ஜ் புஷ் ஜூனியர் அரசியல் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளார் காலின் பாவல்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா அப்ராட் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இந்தியாமிகவும் வளம் வாய்ந்த நாடு. அங்கு ஏராளமான திறமை மறைந்துள்ளது. எனவே இந்தியாவை பலம் பொருந்தியநாடாக அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டும். பாதுகாப்புத் துறையிலும் இந்தியாவை அமெரிக்கா அங்கீகரிக்கவேண்டும்.
1997-ல் நான் இந்தியா சென்றுள்ளேன். இருப்பினும் சில நாட்களே அங்கு தங்கியிருந்தேன். இந்தியாவின்முக்கியத்துவத்தை நான் முழுவதுமாக உணர்ந்துள்ளேன்.
தற்போது பனிப் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவுடன் அமெரிக்கா நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவை பிராந்திய சூப்பர் பவராக அங்கீகரிக்க வேண்டும். உலக அளவில் முக்கியப்பங்காற்றும் தகுதி இந்தியாவுக்கு இருப்பதை அங்கீகரிக்க வேண்டும் என்றார் பாவல்.
1991-ம் ஆண்டு நடந்த வளைகுடாப் போரின் கதாநாயகன் பாவல் என்பது யாராலும் மறக்க முடியாதது. சதாம்உசேனுக்கு எதிராக உறுதியான ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா எடுத்ததற்குப் பின்னணியில் இருந்தவர்பாவல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜமைக்காவைத் தாயகமாகக் கொண்ட பெற்றோருக்குப் பிறந்தவர் பாவல். இவரது நியமனம், அமெரிக்கநாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்ட வேண்டும். அப்படி அங்கீகரிக்கப்பட்டால், அமெரிக்க அரசின் உயர்பதவியில் அமரும் முதல் கருப்பர் என்ற பெருமை பாவலுக்குக் கிடைக்கும்.
உலகம் முழுவதும் அமெரிக்க ராணுவம்:
இதற்கிடையே, உலகம் முழுவதும் அமெரிக்க ராணுவ வீரர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று பாவல் கூறியுள்ளார்.
தலைநகர் வாஷிங்டனில் அவர் கூறுகையில், உலகம் முழுவதும் அமெரிக்க ராணுவ வீரர்களை நிறுத்துவதுதொடர்பாக புஷ் அரசு பரிசீலிக்கும்.
ஈராக் அதிபர் சதாம் உசேனுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டு மீதான பொருளாதார தடைஅதிகரிக்கப்படும். சதாம் உசேன் தொடர்ந்து அபாயகரமான ஆயுதங்களைத் தயாரித்து வருகிறார். அதைத் தடுக்கஇதுவே சரியான வழி.
ஈராக்கியர்களைப் பாதிக்காத வகையில், பொருளாதாரத் தடை இருக்கும். அபாயகரமான ஆயுதங்களிலிருந்துவளைகுடாப் பகுதியைப் பாதுகாக்கும் விதத்திலேயே இந்த நெருக்கடி தரப்படுகிறது.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமைதி நிலவ தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்ரேலுக்குப் பாதுகாப்புஅளிக்கும் அதே நேரத்தில், பாலஸ்தீனியர்களின் உரிமையைப் பாதுகாக்கவும் அமெரிக்கா முக்கியத்துவம்கொடுக்கும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications