சண்டை நிறுத்தத்திற்கு உதவுங்கள் .. விடுதலைப் புலிகள்
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு ஏற்பட நடத்தப்படவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் சண்டைநிறுத்தம் அறிவிக்கப்பட இலங்கைஅரசுசை வலியுறுத்த வேண்டும் என்று உலக நாடுகளுக்கு விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் கடந்த 17 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே நடந்து வரும் சண்டையை நிறுத்தும் வகையிலும், இலங்கையில்அமைதியை ஏற்படுத்தும் வகையிலும் இலங்கை அரசு, நார்வே தூதுக்குழு முயற்சியுடன் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் முழுமூச்சாக இறங்கியுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான ஆயத்தங்கள் ஒரு பக்கம் நடந்து கொணடிருந்தாலும், இன்னொரு பக்கம் இலங்கையில் சரிவை நோக்கிச்சென்று கொண்டிருக்கும் பொருளாதாரத்தை சீர்தூக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார் அதிபர் சந்திரிகா. அவர் பிரான்ஸ் உள்பட பல நாடுகளிடம் பொருளாதாரஉதவி கேட்டுள்ளார்.
பொருளாதார உதவி குறித்து இலங்கை அரசுக்கும், பிரான்சுக்கும் இடையே திங்கள்கிழமை பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் லண்டன் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நிலையான சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படாமல் இலங்கைஅரசுடன் நாங்கள் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கினால் அதற்கு முழு வெற்றி கிடைக்காது என்று கூறியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறுகையில், விடுதலைப் புலிகளுடன், நிபந்தனையற்றபேச்சுவார்த்தை இலங்கை அரசு தயாராக உள்ளது. ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது சண்டை நிறுத்தம் என்ற பேச்சுக்கேஇடமில்லை என்றார்.
இதற்கு விடுதலைப்புலிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார சீர்குலைவை சமன்படுத்தும் விதத்தில்பாரிசிடம் பொருளாதார உதவி கேட்டுள்ளார் சந்திரிகா. இது எங்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
யாழ்ப்பாணம் பகுதியில் வன்முறை நடந்து கொண்டிருக்கும் போது ஒருகாலும் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றியைத் தராது.
புலிகள் தலைவர் பிரபாகரன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்ததற்கு இலங்கை அரசு மிகவும் தாமதமாகவே பதில்அளித்தது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தான் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளுடன் நியாயமான முறையில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசுமுன்வர வேண்டும் என்று இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுக்குமாறு சர்வதேச நாடுகளிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் என்று அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications