ஆசிய கோப்பை டென்னிஸ்: பூபதி பங்ககேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெல்லியில் 4-வது ஆசியக் கோப்பை டென்னிஸ் போட்டி செவ்வாய்க்கிழமைதுவங்குகிறது.

இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்தியா இந்தப் போட்டித் தொடரில்சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்புச் சாம்பியன்உஸ்பெகிஸ்தான் இம்முறை போட்டியில் கலந்து கொள்ளாததால், இந்தியாவின் பட்டவாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

கொரியா மட்டுமே இந்தியாவுக்கு கடும் எதிர்ப்பாக இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்டுகிறது. கொரியாவின் முன்னணி வீரர்களான ஹியூங் டெய்க் லீ மற்றும்யோங்க் இல் யூன் ஆகியோர் இப்போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

இந்தியத் தரப்பில் முன்னணி வீரர் லியாண்டர் பயஸ் கலந்து கொள்ளவில்லை.மற்றொரு முக்கிய வீரரான மகேஷ் பூபதி பங்கேற்கிறார். அவர் தவிர, ஹர்ஷ் மங்கட்,சையத் பசலுதீன், நிதீன் கீர்த்தனே ஆகியோரும் இந்திய அணியில் உள்ளனர். இந்தியஅணியின் விளையாடாத கேப்டனாக ரமேஷ் கிருஷ்ணன் இருப்பார்.

ஆடவர் பிரிவில் தாய்லாந்து, கெரியா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுளும், மகளிர்பிரிவில் இந்தோனேசியா, தாய்லாந்து, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள்பங்கேற்கின்றன.

யு.என்.ஐ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற