இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM சார்! என்ற பெயரில் திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முரசொலியில் வெளியிட்டுள்ள பதிவில், உடனடியாக நிஜ ஆக்ஷனில் இறங்குங்கள். அல்லது வாயைத் திறந்து பேசுங்கள். தனது தங்கை நலமாக வாழ வேண்டும் என ரவுடிகளை வேட்டையாடிய திருப்பாச்சியைப் போல நீங்கள் மாற வேண்டாம். Real Life-இல் அப்படி மாறவும் முடியாது சார். உண்மையில் குழந்தைகளுக்கான அன்புள்ள மாமாவாக மாறுங்கள் சார் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்,"Dear CM Vijay Sir போதும் சார்! தமிழ்நாடு முழுவதும் பிஞ்சு குழந்தைகளின் ஓலங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்கான காரணத்தை கண்டறியவும் மிருக மனிதர்களை ஒடுக்கவும் தங்களுக்கான நேரம் போதும் என்றே தோன்றுகிறது சார். தயவுசெய்து ஆக்ஷனில் இறங்குங்கள் சார்!

At least from now on deliver change instead of merely spouting heroic rhetoric CM Vijay Sir Anbil Mahesh

'உங்களின் ஹீரோயிசத்தைப் பார்த்துதான் உங்களுக்கு ஓட்டுப் போட்டோம்' என்கிறார்கள் மக்கள். இறந்த குழந்தைகளை நினைத்து மனம் வெதும்பும் நேரத்தில், அப்பாவி மக்கள் பேசும் இதுபோன்ற வார்த்தைகளாலும் வேதனை ஏற்படுகிறது. அவர்களுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது என்றே தெரியவில்லை.

வாழ்வும் அரசியலும் என்பது ஒரு ஹீரோ Intro பாட்டு, ஒரு குத்துப்பாட்டு, ஒரு சென்டிமென்ட் பாட்டு கிடையாது! வாழ்வும் அரசியலும் என்பது ரவுடிகளை எதிர்த்து 5 சண்டை காட்சிகளை Shoot செய்வது கிடையாது! வாழ்வும் அரசியலும் என்பது துப்பாக்கி படம் போல சுட்டுக்கொண்டே இருப்பது கிடையாது! நிஜ வாழ்க்கையில் காலருக்குள் இருந்து சிகரெட்டை எடுக்க முடியாது! இது அப்பாவி மக்களுக்கு தெரியுமோ தெரியாதோ!

ஆனால் உங்களுக்கு நன்றாகவே தெரியும் CM Sir. நன்றாகவே தெரிந்திருந்தும் தங்களின் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் வீரவசனம் பேசினீர்கள். திரையில் தோன்றும் விஜயை போலவே பிரச்சாரத்திலும் மக்களை ஏமாற்றினீர்கள். அதன் பலனாக மக்கள் இப்போது கேள்வி கேட்கிறார்கள். அறியாமையால் கேள்வி கேட்கிறார்கள் என்று எண்ணிவிடாதீர்கள். அவர்களின் கேள்வி உங்களுக்கானது என்பதை மறந்துவிடாதீர்கள்.

உடனடியாக நிஜ ஆக்ஷனில் இறங்குங்கள். அல்லது வாயைத் திறந்து பேசுங்கள். தனது தங்கை நலமாக வாழ வேண்டும் என ரவுடிகளை வேட்டையாடிய திருப்பாச்சியைப் போல நீங்கள் மாற வேண்டாம். Real Life-இல் அப்படி மாறவும் முடியாது சார். உண்மையில் குழந்தைகளுக்கான அன்புள்ள மாமாவாக மாறுங்கள் சார். உங்களின் பக்கம் நின்று சொன்னால் 'அந்தக் குழந்தைகள் எல்லாரும் உங்களுக்காக வாக்குச் சேகரித்தவர்கள்' என்பதை மறவாதீர்கள் சி.எம். சார்.

குழந்தைகளின் ஓலம் ஒருபக்கம் என்றால் மின்வெட்டு மக்களை தூக்கமிழக்கச் செய்கிறது. இப்படியே சென்றால் தொழில் நிறுவனங்கள் எப்படி தமிழ்நாட்டை நம்புவார்கள் சார்? முதலில் மக்கள் எப்படி உங்களை நம்புவார்கள்?

ஆட்சி என்றால் அரசு இயந்திரம் என்ற ஒன்று உள்ளது என்பதை கட்சிக்காரர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். தன்னோடு இருந்தவர்கள் எல்லாம் MLA ஆகிவிட்டார்கள், அமைச்சர் ஆகிவிட்டார்கள் எனும் ஆதங்கத்தில் தங்கள் கட்சிக்காரர்கள் எல்லாம் நேரடியாக ஆய்வுப்பணிக்கு சென்று விட்டார்கள். அதன் உச்சமாக இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் (பஜ்ரங்தள் கொடியுடன் Profile Photo வைத்திருந்தாரே அவர்தான்) 'கட்சிக்காரர்களை உடனே ஆய்வு செய்ய சொல்லுங்க...' என உத்தரவிட்டுள்ளார். ஆகா... போறப்போக்கைப் பார்த்தால் ஆய்வுப்பணிக்கு செல்லும் கட்சிக்காரர்களுக்கு அலவன்சும் கொடுப்பார் போல!

CM சார் தங்களை கிண்டல் செய்கிறேன் என நினைத்து விடாதீர்கள். உள்ளதை உள்ளபடியே சொல்கிறேன். இவையெல்லாம் தங்களுக்கும் நிச்சயமாக தெரிந்திருக்கும். ஆனால் ஏன் இப்படி மௌனமாக உள்ளீர்கள்?

CM விஜய் சார் 'மாற்றத்தைத் தருகிறேன் என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தீர்கள். மக்களும் உங்களை நம்பியுள்ளார்கள். தி.மு.க. சட்டசபையில் இருந்தவர்களையும் (காங்கிரஸ்!) எடுத்துக்கொண்டீர்கள் அல்லவா! மக்களின் நம்பிக்கையையும் தி.மு.க. சட்டசபையில் இருந்த காங்கிரஸ் காரர்களையும் வைத்துக்கொண்டு ஆட்சி அமைத்துள்ளீர்கள் அல்லவா! ஏதாவது மாற்றத்தை கொடுங்கள் சார். இனிமேலாவது வீரவசனம் பேசாமல் ஏதாவது செய்யுங்கள் ப்ளீஸ்!" இவ்வாறு முன்னாள் பள்ளிகல்வித்துறை அமைச்சரும் திமுக நிர்வாகியுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+