பா.ம.க.விடம் கவனம் தேவை .. எச்சரிக்கிறது த.ரா.கா.
சென்னை:
தேசிய ஜனநாயகக் கட்சியில் உள்ள தோழமைக் கட்சியில் தொடர்ந்து கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்ற பாஜகவின் தீர்மானத்தை ஆதரிக்கிறோம்என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் துணைத்தலைவர் கிள்ளிவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தேசிய ஜனநாயகக் கூட்டணிய்ல தமிழக ராஜீவ் காங்கிரஸூம், பாட்டாளி மக்கள் கட்சியும் அங்கம் வகிக்கின்றன.
சமீபத்தில் ஈரோட்டில் நடந்த பாரதிய ஜனதா செயற்குழுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. அதாவது பாமகவும், தராகா வும் கூட்டணியில் தொடர வேண்டும் என்று பாஜக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்தத் தீர்மானத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். அடுத்த பொதுத்தேர்தலிலும் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்போம்.மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கொண்டே பாமக, தமிழகத்தில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதை திமுக புரிந்து கொள்ளவேண்டும்.
பாமக, நேரடியாக திமுகவை விமர்சிப்பதால் பாமகவினருக்கு அதிமுக வில் நல்ல வரவேற்பு உள்ளது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கிள்ளிவளவன்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications