குவாத்ரோச்சி கைதாகி விடுதலை
டெல்லி:
போபர்ஸ் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இத்தாலிய தொழில் அதிபர் குவாத்ரோச்சி மலேசியாவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து சிபிஐ இயக்குநர் ராகவன் நிருபர்களிடம் கூறியதாவது:
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது, சுவீடன் நாட்டு போபர்ஸ் ஆயுத நிறுவனத்திடம் இருந்து பீரங்கிகள் வாங்கியதில் ரூ 64 கோடி ஊழல்நடந்ததாக த் தெரிய வந்தது. இதில் முக்கியக் குற்றவாளி இத்தாலியைச் சேர்ந்த குவாத்ரோச்சி.
இந்த ஊழல் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டது.
போபர்ஸ் ஊழல் வழக்கில் முக்கியக் குற்றவாளியான குவாத்ரோச்சி மலேசியா சென்று அங்கு வசித்து வந்தார். அவரை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, குவாத்ரேச்சியை மலேசியா போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர் கோலாலம்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 30 லட்ச ரூபாய்க்கு 2 நபர் ஜாமீன் பேரில் அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர்எப்போது இந்தியா வருவார் என்று தெரியாது என்றார் ராகவன்.












Click it and Unblock the Notifications