பெண்கள் இட ஒதுக்கீடு: நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது
டெல்லி:
பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா வியாழக்கிழமை விவாதத்திற்கு வந்த போது, நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்துநாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடம் அளிக்கக் கோரும், பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா நாடாளுமன்றத்தில்விவாதத்திற்காகக் காத்திருக்கிறது.
ஏற்கனவே நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டத்தின் போது, இடஒதுக்கீட்டு மசோதா கூட்டத்தொடர் முடியும் தருவாயில்நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வியாழக்கிழமை கூடியதும் விவாதம் தொடங்கியது.
லோக்சபாவில் விவாதம் தொடங்கிய அடுத்த நிமிடமே சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய ஜனதா கட்சி, பகுஜன் சமாஜ்வாடிக் கட்சியினர் மசோதா குறித்தவிவாதத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். இதையடுத்து லோக்சபாவில் பெரும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. முடிவில் சபை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
அடுத்ததாக ராஜ்யசபாவில் பூஜ்ய நேரத்தின் போது பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா குறித்து விவாதம் தொடங்கியதும் அதற்கு கடும் எதிர்ப்புத்தெரிவிக்கப்பட்டது. ராஜ்யசபா தலைவர் கிருஷ்ணகாந்த் பிற்பகல் 2 மணி வரை சபை ஒத்திவைக்கப்படுவதாகக் கூறினார்.
ராஜ்யசபாவில் பூஜ்ய நேரம் முடிந்ததும், காங்கிரஸ் எம்.பி.சுரேஷ் பச்சூரி எழுந்து, பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா இன்னும் நிறைவேற்றப்படாமல்கிடக்கிறதே என்று கேள்வி எழுப்பினார். அவருடன் நாடாளுமன்ற பெண் எம்பிக்கள் அம்பிகா சோனி (தெலுங்கு தேசம்), ஜெயந்தி நடராஜன்(த.மா.கா.) ஆகியோர் சேர்ந்து கோஷம் எழுப்பியதைத் தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றம் கூடும் முன் சபாநாயகர் பாலயோகி அனைத்துக் கட்சிக் கூட்டதைக் கூட்டினார். அந்தக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications