கோவையில் காங்கிரஸ் கவுன்சிலர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை மாநகராட்சிக் கூட்டத்திற்குச் சென்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண்கவுன்சிலர் ஹேமா ஜெயசீலன் கைது செய்யப்பட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சிக் கவுன்சிலரும், காங்கிரஸ் கட்சியின் மகளிரணிச் செயலராகவும்இருப்பவர் ஹேமா ஜெயசீலன். மாநகராட்சியில் அடிக்கடி புகார்களை அள்ளித்தெளித்து வரும் இவர் அடிக்கடி கைது செய்யப்பட்டு ஒருநாள் ஸ்டேஷனில்தங்கியிருப்பது வாடிக்கையாகி விட்டது.

கோவை மாநகராட்சியின் மன்றக் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. இந்தக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஹேமா ஜெயசீலன் வந்தார். அப்போது அவரை மன்றச்செயலர் அவைக்குள் செல்ல அனுமதிக்க மறுத்தார். அப்போது, கவுன்சிலர் அத்துமீறிஅவைக்குள் நுழைய முயன்றார். இதையடுத்து, அங்கிருந்த பெண் போலீசார்அவரைத்தடுத்தனர்.

எனவே ஹேமா ஜெயசீலன் மாநகராட்சியின் முன்பு திடீரென அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டார். எனவே, அவரைப் பெண் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து ஹேமா ஜெயசீலன் கூறுகையில், அவையில் அடுக்கடுக்காககுற்றச்சாட்டுக்களை நான் கூறி வருகிறேன். எனவே இதனைப் பொறுக்காத உறுப்பினர்என்னை அவையில் கலந்து கொள்ளச் செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் கைதுசெய்துள்ளனர்.

இன்றைய அவையில் நான், கவுன்சிலர்களின் மகன்களுக்கு காண்ட்ராக்ட் வழங்கியதுதொடர்பான பிரச்னையை கிளப்ப முடிவு செய்திருந்தேன். இது குறித்து ஏற்கனவேமேயர் மற்றும் கமிஷனருக்கு மனு அனுப்பியிருந்தேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+