பெண் கொலை முயற்சி: 4 பேருக்கு சிறைத்தண்டனை
ஈரோடு:
பெண்ணை நிர்வாணப்படுத்தி ஆற்றில் வீசிக் கொலை செய்ய முயன்ற நான்கு பேருக்கு நாமக்கல் நீதிமன்றம் 10ஆண்டுகள் விதித்து தீர்ப்பளித்தது.
நாமக்கல் அருகே உள்ள கொசவபட்டியைச் சேர்ந்தவர் ஜெயக்கொடி (20). இவருக்கும் ஆறுமுகம் என்பவருக்கும்கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்ஆறுமுகம் தனது அக்காள் மகளை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இதனால் மனமுடைந்த ஜெயக்கொடி தனித்து வாழ முடிவெடுத்தார். தனது பிழைப்பிற்காக ஒரு தொழில் ஒன்றைசெய்ய முடிவு செய்தார். எலுமிச்சை வியாபாரம் செய்ய முடிவு செய்து சந்தையில் கடை ஒன்றை பிடித்துவியாபாரத்தை துவக்கினார்.
அப்போது அங்கு வியாபார விஷயமாக வந்து சென்ற தாஜூஹிதீன் (24), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுகாதலாக மாறி, தாலிகட்டாமல் குடும்பம் நடத்தத் தொடங்கினார்.
இரண்டாவது வாழ்க்கை வாழ்ந்து வந்த ஜெயக்கொடிக்கு மீண்டும் பிரச்னை உருவானது. தாஜூதீன் வேறு ஒருபெண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள்ள டிவு செய்தார்.
எனவே ஜெயக்கொடியை சமாதானப்படுத்த சையத் உசேன், ஜெகன்பாஷா, தாஜூதீன் ஆகியோர் அவரதுவீட்டிற்குச் சென்றனர்.
அங்கு, ஜெயக்கொடியை அழைத்துக் கொண்டு காவிரி ஆற்றுப் படுகை வழியாக வந்து கொண்டிருந்தனர்.அப்போது தாஜூதீனின் உறவினர் கமல்பாட்ஷாவும் வந்தார். நான்கு பேரும் ஆற்றுப் பாலத்தைக் கடக்கும் போதுஜெயக்கொடியை கத்தியால் குத்தினர். அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டனர்.
காயமடைந்த ஜெயக்கொடி, இறந்து விட்டது போல நடித்தார். ஆனால் சந்தேகமடைந்த தாஜூதீன், அவருடன்வந்தவர்கள், ஜெயக்கொடியை நிர்வாணப் படுத்தி கல்லோடு சேர்த்துக் கட்டி ஆற்றில் தள்ளி விட்டு விட்டு ஓடிவிட்டனர்.
அப்போது தண்ணீருக்குள் இருந்த ஜெயக்கொடியை அங்கு மீன்பிடிக்க வந்த சிலர் காப்பாற்றி மருத்துவமனையில்சேர்த்தனர். இதில் ஜெயக்கொடி உயிர் பிழைத்தார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நான்குபேரையும் கைது செய்தனர்.
நாமக்கல் சப்கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில், ஜெயக்கொடியை நிர்வாணப்படுத்திக் கொலை செய்ய முயன்றநான்கு பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி ஜெயராம் தீர்ப்பளித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications