ஜெ.வுடன் சண்டை போயே போச் ..சோ
சென்னை:
நானும், ஜெயலலிதாவும் 45 வருடங்களுக்கு மேலாக நண்பர்களாக இருந்தவர்கள். இடையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் பிரிந்தோம்.இப்போது எல்லாம் சரியாகி விட்டது என்று துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஜெயலலலிதா, துக்ளக் ஆசிரியர் சோவை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பைஏற்படுத்தியது.
ஜெயலலிதா எதற்காக சோவை சந்தித்துப் பேசினார் என்பது புரியாத புதிராக இருந்தது. ஜெயலலிதா, பாரதிய ஜனதாவில் சேரவிருப்பதாகவும், அவர் மீதுதொடரப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுதல் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள தண்டனைகளை நிறுத்தி வைத்தல் போன்றவை குறித்து பேசியதாகவதந்திகள் ஏற்பட்டது.
இதுகுறித்து ஜெயலலிதா ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நானும், சோவும் நீண்ட கால நண்பர்கள். நட்பு ரீதியாக நாங்கள் சந்தித்துப்பேசினோம் என்றார்.
இந்த நிலையில் சோ. பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டி:
நானும், ஜெயலலிதாவும் கடந்த 45 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தோம். இடையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்தோம். அப்போதுமிகவும் கடினமான வார்த்தைகளை நாங்கள் உபயோகப்படுத்தினோம்.
இது போன்ற உரசல்கள் நான் பழகிய பல நண்பர்களிடமும் எனக்கு ஏற்பட்டதுண்டு. ஜெயலலிதா விஷயத்திலும் அதே போல் ஆகி விட்டது. இந்தநிலையில் ஜெயலலிதா என்னை சந்தித்துப் பேசினார். நாங்கள் நீண்ட நேரம் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினோம்.
இலக்கியத்திலிருந்து, நாடகங்கள் மற்றும் தற்போதைய அரசியல் வரை அனைத்து விஷயங்கள் குறித்தும் பேசிக் கொண்டோம். ஜெயலலிதா என்னைவந்து சந்தித்ததில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
அவர் என்னிடம் எந்த உதவியும் கேட்கவில்லை. பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஜெயலலிதா விரும்புவதாக பத்திரிக்கையில் செய்திவெளியாகியுள்ளது. அதில் சிறிதளவும் உண்மையில்லை. அதுபோன்ற அபிப்ராயம் அவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ஜெயலலிதாவும் , நானும் சந்தித்துப் பேசியதில் கூட்டணியும் உண்டு. ஓட்டும் உண்டு. மக்களும் உண்டு. அடுத்த கட்ட சந்திப்பு எப்போது என்று தெரியாது.எங்களுக்குள் ஏற்பட்ட விரிசல்களைச் சரிசெய்வதற்காக அவர் இங்கு வந்தார். இந்தச் சந்திப்பில் ரஜினிகாந்த் குறித்து எதுவும் பேசவில்லை. தமாகாவுடன் நல்ல உறவு இருப்பதாக ஜெயலலிதா கூறினார் என்றார் சோ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications