கோபி கோர்ட்டில் நக்கீரன் கோபால் சாட்சியம்
கோபி:
வீரப்பன் கூட்டாளிகள் மீதான வழக்கில், கோபி கோர்ட்டில் நக்கீரன் கோபால் சாட்சியம் அளித்தார்.
தாளவாடி அருகே அதிரடிப்படையினர் சில ஆண்டுகளுக்கு முன்பு ரோந்து சென்ற போது அங்கு வீரப்பன் கூட்டாளிகள் பதுங்கி இருந்தனர். அதிரடிப்படையினர்அவர்களைப் பிடிக்க முயன்ற போது வீரப்பன் கூட்டாளிகள் அவர்களைத் துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த வழக்கில் வீரப்பனின் கூட்டாளிகள் மகாதேவன், ஜெயராமன், சுரேஷ், துப்பாக்கிச் சித்தனின் மனைவி சிக்குமாரி ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அப்போது தப்பித்துச் சென்ற துப்பாக்கிச் சித்தன் கோபால் மூலம் கோர்ட்டில் சரணடைந்தார்.
இவர்கள் மீதான வழக்கு கோபி கோர்ட்டில் நடந்து வருகிறது. இவர்கள் 5 பேரும் புதன்கிழமை கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நக்கீரன் கோபால் இந்த வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கோபி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:
துப்பாக்கிச் சித்தன் என்னிடம் வந்து சரணடைய விரும்புவதாகத் தெரிவித்தார். இதுகுறித்து நான் முதல்வரிடம் தெரிவித்தேன். அவர் அப்போதையஐ.ஜி.காளிமுத்துவிடம் ஒப்படைக்குமாறு கூறினார்.
உடனடியாக நான் எனது உதவியாளர்களுடன் சென்று துப்பாக்கிச் சித்தனை ஐஜியிடம் ஆஜர்படுத்தினேன். இதற்கு நன்றி தெரிவித்து ஐஜி எனக்குக் கடிதம்எழுதியுள்ளார் என்றார் கோபால்.
கோபி கோர்ட்டில் நீதிபதி நூர் முகமது முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது. பின்னர் விசாரணையை அடுத்த மாதம் 3 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications