வீரப்பன் விவகாரம்: "விசாரணைக் கமிஷன் தேவை
சென்னை:
வீரப்பன் விவகாரம் குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
திராவிட தெலுங்கர் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் தலைவர் காமாட்சி நாயுடு சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களை தாக்கல்செய்துள்ளார். அவற்றில் கூறப்பட்டுள்ளதாவது:
ராஜ்குமார் கடத்தலுக்கு பிறகு தமிழகத்தில் செயல்பட்டு வரும் தீவிரவாத குழுக்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தமிழ் என்ற போர்வையில்தீவிரவாத நடவடிக்கை அதிகரித்து வருகிறது. பா.ம.க, ம.தி.மு.க , தமிழர் தேசிய இயக்கம் ஆகிய கட்சிகள் இவற்றுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.
தீவிரவாதிகள் வெப்சைட் அமைக்கும் அளவிற்கு இருக்கின்றது. ஆந்திரா, கர்நாடகம், கேரளா, இலங்கை வடகிழக்கு பகுதி ஆகிய பகுதிகளுடன் தனித்தமிழ்நாடு உருவாக்கப்போவதாக வெப்சைட்டில் கூறியுள்ளது.
காஷ்மீர், பாஞ்சாப் போல தமிழகம் மாறிவருகின்றது. பா.ம.க , ம.தி.மு.க, தமிழர் தேசிய இயக்கம் ஆகிய மூன்று கட்சிகளும் எல்.டி.டி.ஈ மீதானதடையை நீக்க முயற்சி எடுத்து வருகின்றது.
இந்த மூன்று கட்சிகளையும் தடைசெய்யவேண்டும். ராஜ்குமாரை கடத்திய வீரப்பனை அரசியல் வாதிகள் நெருங்க முடிகிறது. ஆனால் போலீஸாரால்நெருங்கமுடியவில்லை.
எனவே வீரப்பன் விவகாரம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்தமனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகின்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications