முதுகை ஒடிக்காத புத்தகம் ..கோவையில் அறிமுகம்
கோவை:
இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடச் சுமையை விட பாடப் புத்தகச் சுமைதான் பெரும் சுமையாகஉள்ளது.
"பை நிரம்பி வழிய புத்தகங்களைச் சுமக்கும் குழந்தைகளின் பாடப் புத்தக சுமையை பெற்றோர்களும்,ஆசிரியர்களும் அன்றாடம் பார்த்துக் கொண்டிருந்தாலும் இதற்குத் தீர்வு காண முயலவே இல்லை. எனவே,இத்தகைய சூழ்நிலையை மாற்ற முன் வந்துள்ளது ஒரு புத்தகப் பதிப்பகம்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாடப் புத்தகங்களைத் தயாரித்து வந்த இந்த நிறுவனம், மெட்ரிகுலேசன்பள்ளிக் குழந்தைகளுக்கு பருவ முறைப்பாடப் புத்தகங்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் முதல்கட்டமாக மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில், ஒரு புத்தகத்தைத்தயாரித்துள்ளது.
ஒரே புத்தகத்தில் முதல் நான்கு மாத காலத்திற்குத் தேவையான அனைத்துப் பாடங்களையும் இதில் இடம் பெறச்செய்துள்ளனர். இப்புத்தகம் முடிந்ததும், அடுத்த கட்டப் பாடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஒரே புத்தகத்தில் கணிதம், சமூக அறிவியல், ஆங்கிலம், சுற்றுச் சூழல் ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.இந்தப் பாடப் புத்தகத்தில், நான்கு மாதப் பாடங்கள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். எனவே நான்கு மாதங்களுக்குஒரு புத்தகத்தை மட்டும் இக் குழந்தைகள் எடுத்துச் சென்றால் போதும்.
இந்த வரிசைப் பாடங்களுக்கு டிஸ்கவரி எனப் பெயரிட்டுள்ளனர். கோவையில் 20 பள்ளிகள் இந்தப்பாடத்திட்டத்தைப் பின்பற்ற ஒப்புக் கொண்டுள்ளன. அடுத்து வரும் கல்வி ஆண்டிலிருந்து இப்புத்தகம் தமிழகம்முழுவதும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என புத்தக நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications